வேட்புமனு தாக்கல் தொடக்கம் - ஜனவரி 28. வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாள் - பிப்ரவரி 4. வேட்புமனுக்கள் ஆய்வு செய்தல் - பிப்ரவரி 5. வேட்புமனு திரும்ப பெறுதல் - பிப்ரவரி 7. வாக்குப்பதிவு - பிப்ரவரி 19. வாக்கு எண்ணிக்கை - பிப்ரவரி 22. தேர்தல் நடவடிக்கைகள் முடிவுறும் நாள் - பிப்ரவரி 24. தேர்ந்தெடுக்கப்படும் வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு நாள் - மார்ச் 2. மறைமுக தேர்தல் மூலம் மாநகராட்சிகளின் மேயர், துணை மேயர், நகராட்சி-பேரூராட்சிகளின் தலைவர் மற்றும் துணைத்தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான கூட்ட நாள் - மார்ச் 4.
சென்னை,ஜன.27- தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19 அன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் 2019 ஆம் ஆண்டில் காஞ்சி புரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து 24 மாவட்டங்களுக்கு மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. 9 மாவட்டங் களுக்கு 2021 அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதி களில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூ ராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 838 பதவி இடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 அன்று நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணைய அலு வலகத்தில் ஜனவரி 26 அன்று செய்தியாளர்களி டம் கூறியதாவது: சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நக ராட்சிகள், 490 பேரூராட்சிகள் என தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக் கும், வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்ட வாறு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனைத்து தேர்தல் முன்னேற்பாடு பணிகளையும் மேற் கொண்டுள்ளது.
வார்டு மறுவரையறை செய்யப்பட்ட அறி விப்பை அடிப்படையாக கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளா ட்சி அமைப்புகளுக்கும் வாக்குச்சாவடி பட்டி யல்கள் 9.11.21 மற்றும் 4.1.22 அன்றும், வாக்காளர் பட்டியல்கள் 9.12.21 மற்றும் 10.1.22 அன்றும் வெளியிடப்பட்டன. தேர்தல் அறிவிப்பை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஜனவரி 28 ஆம் தேதி வெளியிடும். வேட்புமனு தாக்கல் 28 ஆம் தேதி யன்றே தொடங்கும். வேட்புமனுக்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தரப்படும். வாக்குப்பதிவு பிப்ரவரி 19 சனிக்கிழமையன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடை பெறும். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22 செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கும். கொரோனா தொடர்பான நிலை யான செயல்முறைகளை பின்பற்றி, சமூக இடை வெளி மற்றும் தொற்று தடுப்பு நடவடிக்கை களை மேற்கொண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணை யம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்தல், வேட்புமனுக் களை ஆய்வு செய்தல், திரும்பப்பெறுதல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்தல் ஆகியவற்றை கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் பதிவு செய்திட இந்த ஆணையத்தால் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய ஆணைகள் வழங்கப் பட்டுள்ளன. மாநகராட்சி மன்ற உறுப்பினர், நகராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய அனைத்து பதவி யிடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் நடைபெறும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய மும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு த்துறையும், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் மற்றும் பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து இயக்ககம் ஆகியவற்றுடன் உள்ளாட்சி தேர்தலின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை 10.12.21 அன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தற்போது கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
31,029 வாக்குச்சாவடிகள்
தேர்தல் நடைபெற உள்ள மாநகராட்சிகளில் 15,158 வாக்குச்சாவடிகளும், நகராட்சிகளில் 7,417 வாக்குச்சாவடிகளும், பேரூராட்சிகளில் 8,454 வாக்குசாவடிகளும் என மொத்தம் 31,029 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். சென்னை மாநகராட்சியில் மட்டும் 5,794 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடிகளில் சாய்வுதளம், சக்கர நாற்காலி மற்றும் துணை ஆட்கள் ஆகிய வற்றை ஏற்பாடு செய்வதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப் பட்டுள்ளன. நடப்பு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கா ளர் பட்டியலில் உள்ள அடிப்படை விவரங்களை கொண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக் கான வாக்காளர் பட்டியல், தேசிய தகவலியல் மையத்துடன் இணைந்து ஆன்லைன் முறை யில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் புகைப் படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை தயாரித்துள்ளது.
இந்த தேர்தலில் 1 கோடியே 37 லட்சத்து 6 ஆயி ரத்து 793 ஆண் வாக்காளர்களும், 1 கோடியே 42 லட்சத்து 45 ஆயிரத்து 637 பெண் வாக்காளர் களும், 4,324 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 கோடியே 79 லட்சத்து 56 ஆயிரத்து 754 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவுக்கு பயன்படுத்துவதற்காக பாரத மின்னணு நிறு வனத்தால் சுமார் 55,337 கட்டுப்பாட்டு கருவிகள் (கண்ட்ரோல் யூனிட்), 1,06,121 வாக்குப்பதிவு எந்திரங்கள் (பேலட் யூனிட்) முதல்நிலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.