அனைத்து முகவர்களுக்கும் குழு காப்பீடு, ஓய்வூதியம் வழங்க லிகாய் கோரிக்கை
கும்பகோணம், ஜூலை 5 - அகில இந்திய எல்ஐசி முக வர்கள் சங்கம் (லிகாய்) கும்பகோ ணம் கிளை 2இன் சார்பில் தஞ்சா வூர் மாவட்டம் கும்பகோணத்தில் பேரவை நடைபெற்றது. பேரவைக்கு கிளைத் தலை வர் தமிழ்ச்செல்வம் தலைமை வகித்தார். முன்னதாக குழந்தை வேலு வரவேற்றார். கோட்டப் பொதுச் செயலாளர் எம்.சங்கர் துவக்கி வைத்து பேசினார். மாநில செயல் தலைவர் நட ராஜன், மாநிலச் செயலாளர் ராஜா, கோட்டப் பொருளாளர் கனக ராஜன், கிளை பொறுப்பாளர் கிருஷ்ணன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஜெயபால், மாவட்டத் தலைவர் கண்ணன், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க தஞ்சை மாவட்ட துணைத் தலைவர் சுப்ர மணியன், வளர்ச்சி அதிகாரி கிளைத் தலைவர் சுரேஷ், கிளைச் செயலாளர் சரவணபிரபு உள்ளிட் டோர் வாழ்த்திப் பேசினர். கிளைச் செயலாளர் முத்து கிருஷ்ணன் செயலாளர் அறிக்கை யையும், பொருளாளர் சங்கர் வரவு- செலவு அறிக்கையையும் முன் வைத்தனர். கோட்டத் தலைவர் முனுசாமி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து அறிவித்தார். மாநிலத் தலைவர் பூவலிங்கம் நிறைவுறையாற்றினார். கே. பார்த்திபன் நன்றி தெரிவித்தார். பேரவையில், பொறுப்பாளர் களாக 16 பேர் கொண்ட செயற்குழு தேர்வு செய்யப்பட்டது. அதில் தலைவராக கலியபெருமாள், செயலாளராக சங்கர், பொரு ளாளராக முருகன், துணைத் தலை வராக முத்துகிருஷ்ணன், இணைச் செயலாளராக லெட்சுமி, கோட்டத் திற்கான கிளை பொறுப்பாளராக தமிழ்ச்செல்வன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அனைத்து முகவர்களுக்கும் வாழ்நாள் முழுவதும் குழு காப்பீடு மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மன்ற வேறு பாடு இல்லாமல் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். முக வர்களுக்கு பழைய முறைபடியே கமிஷன் வழங்க வேண்டும். பிரீமி யம் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. 2025 பிப்ரவரி 11 ஆம் தேதி தில்லியில் நடந்த தர்ணாவில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு மடல் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.