tamilnadu

ஒன்றெனப் பாடுவோம்

எல்லோரும் ஒன்றெனப் பாடுவோம் 
நாம் எல்லோரும் ஒன்றெனப் பாடுவோம்
1. 
உயர்ந்தவரென்று யாருமில்லை - இங்கு  
தாழ்ந்தவரென்று யாருமில்லை 
சிறியவரென்று யாருமில்லை - இங்கு  
பெரியவரென்று யாருமில்லை  
(எல்லோரும்) 
2. 
இன  மொழி மத பேதமில்லையே 
இந்தியர்  நாங்கள் ஐயமில்லையே 
வேற்றுமை உணர்வுகள் இல்லையே 
ஒற்றுமையே எங்கள் எல்லையே 
( எல்லோரும்) 
3.
நம்பிக்கை நமதென்று பாடுவோம் 
மூட நம்பிக்கை ஒழித்திடப் பாடுவோம்  
அறிவியல் போற்றிப் பாடுவோம் 
அறியாமை அகன்றிடப் பாடுவோம் 
(எல்லோரும்) 
4. 
காலம் மாறுமென்று பாடுவோம் - எதிர் 
காலம் நமதென்று பாடுவோம். 
குழந்தைகள் மகிழ்வுடன் பாடுவோம் 
நம் கனவுகள் நிறைவேறப் பாடுவோம். 
(எல்லோரும்)
– உதயசங்கர்