tamilnadu

img

மேகதாது அணையை தடுத்து நிறுத்துவோம்!

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட ரூ. ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்த கர்நாடக மாநில பாஜக அரசை கண்டித்தும் அணையை தடுத்து நிறுத்துமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தியும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்றார்.