tamilnadu

img

`வாக்குரிமை காப்போம், ஜனநாயகம் மீட்போம்’ சிறுபான்மை மக்கள் நலக்குழு தெருமுனை பிரச்சாரம்

`வாக்குரிமை காப்போம், ஜனநாயகம் மீட்போம்’  சிறுபான்மை மக்கள் நலக்குழு தெருமுனை பிரச்சாரம்  

மயிலாடுதுறை, அக். 12-  மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் திருமுல்லைவாசல் கடைவீதியில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள்நலக்குழு சார்பில், “வாக்குரிமை காப்போம்! ஜனநாயகம் மீட்போம்!!’’ என்ற முழக்கத்தோடு தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.  மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் அக்.2 அன்று ஆக்கூர் பகுதியில் மாவட்டத் தலைவர் எஸ்.ஜான்சன் தலைமையில் துவங்கப்பட்டு மயிலாடுதுறை, நீடூர், இலுப்பூர், வடகரை, கிளியனூர், திருமுல்லைவாசல், ஆக்கூர் உள்ளிட்ட 17 இடங்களில் துண்டு பிரசுரம் வழங்கி நடைபெற்றது. இந்நிலையில், வெள்ளியன்று திருமுல்லைவாசல் கடைவீதியில் எம். செல்லப்பன் தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது.  பிரச்சாரக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் கே.பி. மார்க்ஸ், மாவட்ட துணைச் செயலாளர் டி. சிம்சன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் தோமஸ், பாரதி, குமார் மற்றும் திருமுல்லைவாசல் இரு கிராம ஜமாத்து கமிட்டி பொறுப்பாளர்கள் உரையாற்றினர்.  மாநில பொதுச் செயலாளர் செந்தில்குமார் பிரச்சாரத்தை நிறைவு செய்து உரையாற்றினார்.