சாதியம் தகர்ப்போம்! மனிதம் வளர்ப்போம்! தென்காசி, சங்கரன்கோவிலில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கலைப் பிரச்சாரம்
தென்காசி, ஆக.17- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5 ஆவது மாநில மாநாடு ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதி களில் மயிலாடுதுறையில் நடை பெறுகிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு சாதியம் தகர்ப்போம்! மனிதம் வளர்ப்போம்! என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யும் சென்னை கலைக்குழுவும் இணைந்து தமிழகம் முழுவதும் கலைபயண பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறது. சங்கரன் கோவிலில் பாடப் பிள்ளை யார் கோவில் முன்பு நடைபெற்ற பிரச்சாரத் திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் அசோக்ராஜ் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன், தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட குழு உறுப்பி னர் சுப்ரமணியன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். தென்காசியில் நடை பெற்ற நிகழ்ச்சிக்கு அனைத்துத்துறை ஓய்வு பெற்றோர் மாவட்ட தலைவர் மாரியப் பன் தலைமை தாங்கினார். முன்னணியின் மாவட்ட செயலாளர் பாலு, சிபிஎம் மாவட்ட செயலாளர் உச்சி மாகாளி, சிஐடியு மாவட்ட செயலாளர்.மணிகண்டன், தமுஎகச மாவட்ட செயலாளர் பக்ருதீன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைச் செயலாளர் மேனகா ஆகியோர் கலந்து கொண்டனர்.