tamilnadu

img

அமெரிக்காவின் அடாவடி வரி விதிப்பால் வேலையிழக்கும் தொழிலாளர்கள் தமிழக தொழில் நகரங்களில் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவின் அடாவடி வரி விதிப்பால் வேலையிழக்கும் தொழிலாளர்கள்

தமிழக தொழில் நகரங்களில் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் 

சென்னை, செப். 5 - இந்தியா மீதான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடாவடி யான 50 சதவிகித வரி விதிப்பைக் கண்டித்தும், நாட்டின் சுயசார்பு, ஏற்றுமதி தொழில்கள், தொழிலா ளர்களின் வேலைவாய்ப்பை பாது காக்க வலியுறுத்தியும் வெள்ளிக் கிழமையன்று (செப்.5) இடது சாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்-எல்) லிபரே சன் ஆகிய இடதுசாரிக் கட்சிகள்  சார்பில், காஞ்சிபுரம், கோயம்புத்  தூர், திருப்பூர், ஈரோடு, ஓசூர், வேலூர், மதுரை, திருச்சிராப் பள்ளி, விருதுநகர், தூத்துக்குடி, திண்டுக்கல், கரூர் என தமிழகம் முழுவதும் 13-க்கும் மேற்பட்ட தொழில் நகரங்களில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டங்களில் பல  ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அமெரிக்க ஏகாதிபத்தி யத்திற்கு எதிராகவும், அமெரிக்கா வின் வரித் தாக்குதலிலிருந்து இந்திய தொழில் முனைவோர் மற்றும் கோடிக்கணக்கான தொழி லாளர்களை பாதுகாப்பதற்கு நட வடிக்கை எடுக்காத ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். அமெரிக்காவின் 50 சதவிகித அடாவடி வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதியில் 66 சதவிகிதம் வீழ்ச்சி ஏற்படும்; 4 ஆயிரத்து 820 கோடி டாலர் மதிப்புள்ள வணிக வாய்ப்பை இழக்க நேரிடும்; ஏற்று மதித் தொழில்களில் 70 சதவிகி தம் உற்பத்தியை குறைக்க வேண்டி யது வரும் என கணிக்கப்பட்டுள் ளது. இதனால் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும். எனவே, அமெரிக்க ஏகாதி பத்திய அரசின் நிர்பந்தத்துக்கு அடி பணியாமல் இந்திய இறை யாண்மையை, சுயசார்பைப் பாது காக்க அரசியல் உறுதியுடன் ஒன்றிய பாஜக அரசு செயல்பட வேண்டும் என ஆர்ப்பாட்டங்களில் இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தினர்.

சிறு தொழில் முனைவோர், தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும்

மோடியின் டிரம்ப் சகவாசத்தால் நாட்டிற்கு பயனில்லை : தலைவர்கள் பேச்சு

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தையொட்டி இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டி அளித்தனர். சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பேசுகையில், “டிரம்ப் என்ற தனி நபரின் விருப்பு வெறுப்புக்காக விதிக்கப்பட்டுள்ள வரியால் பல நாடுகளில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் மட்டுமன்றி முதலாளிகளே இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். டிரம்ப்பை நெருக்க மான நண்பர் என மோடி கூறிக்கொண் டார். ஆனால், மோடியின் நண்பரால் இந்தியா வில் பொருளாதார நெருக்கடியை உரு வாக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார். “நாடு முழுவதும் கடுமையான வேலை யிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்க வேண்டும். சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையினருக்கு குறைந்த வட்டியில் கடன் தர வேண்டும். கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சலுகை அளிக்க வேண்டும். வேறு நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்” என்றார். மேலும், “தமிழகத்தில் திருப்பூர் ஜவுளி  உற்பத்தி நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது.  ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் தோல் தொழில் முடங்கும் நிலை உள்ளது. ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் மதிப்பிலான முந்திரி ஏற்றுமதியை நம்பியுள்ள விவசாயிகள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றை சரி செய்ய அவசர உணர்வுடன் ஆக்கப்பூர்வ மாக ஒன்றிய அரசு செயல்பட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயலாளர் இரா. முத்தர சன் பேசுகையில், “டிரம்ப், மோடி இருவரும் ஒருவருக்கொருவர் மாறி  மாறி தேர்தல் பிரச்சாரம் செய்தனர். இவர்களது நட்பு இந்தியாவிற்கு பலனளிக்கவில்லை. ஒரு சுய சார்புள்ள நாடு மற்றொரு நாட்டோடு உறவு வைத்துக் கொள்வது, அந்த நாட்டின் இறையாண்மை. ஆனால், அமெரிக்க ஜனாதிபதி சொல்கிற நாடுகளிடம் மட்டும்  தான் வர்த்தகம் செய்ய வேண்டு மென்பது சட்டாம்பிள்ளைத்தனம்” என்று சாடினார். “அமெரிக்காவிடம் இந்தியா சரணாகதி அடையாமல், இடது சாரிகள் உள்ளிட்ட பிற கட்சி களோடு கலந்து பேசி மாற்றுக் கொள்கையை உருவாக்கி, இந்திய தொழில்களை, தொழி லாளர்களை ஒன்றிய அரசு பாது காக்க வேண்டும்” என்றார். “இந்தியாவின் அணிசேரா வெளியுறவுக் கொள்கையை, அமெரிக்க சார்பு கொள்கையாக மோடி மாற்றினார். அதன் விளை வாக வர்த்தகப் போரை நாடு எதிர் கொண்டுள்ளது. டிரம்ப் பதவி யேற்புக்கு அம்பானி செல்கிறார். அம்பானி மகன் திருமணத்திற்கு டிரம்ப் மகன் வருகிறார். கார்ப்பரேட் முதலாளிகள் பேசி வைத்து லாபம் சம்பாதிக்கின்றனர். ஆனால், தேசம் நெருக்கடியை எதிர்கொள் கிறது. தேசத்தை நேசிக்கும் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவதற்கான துவக்கமாக இந்தப் போராட்டம் நடக்கிறது” என்று சிபிஐ(எம்எல்)லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி கூறினார்.