சிபிஐ மூத்த தலைவர் எஸ்.சுதாகர் ரெட்டி மறைவு தலைவர்கள் இரங்கல் - படத்திற்கு மலரஞ்சலி
சென்னை, ஆக. 23 - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தேசிய பொதுச் செயலாளருமான தோழர் சுராவரம் சுதா கர் ரெட்டி (83) வெள்ளிக்கிழமை (ஆக. 22) அன்று இரவு 9 மணியளவில் காலமானார். ஆஸ்துமாவால் உடல் நலிவுற்று, ஹைத ராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பல னின்றி அவர் காலமானார். மாணவர் பருவம் முதல் பொதுவாழ்க்கை தற்போதைய தெலுங்கானா மாநிலத்தி லுள்ள, மகபூப்நகர் மாவட்டத்தில், விடு தலைப் போராட்ட வீரர் குடும்பத்தில் 1942 மார்ச் 25 அன்று பிறந்த சுதாகர் ரெட்டி, மாணவப் பருவத்திலேயே, ஏஐஎஸ்எப் மாணவர் இயக்கத்தின் மூலம் பொதுவாழ் வில் அடியெடுத்து வைத்தார். உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்த அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, தனது அர்ப்பணிப்பு மிக்க பணிகளால், விவசாயத் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர், கட்சியின் ஆந்திர மாநிலச் செயலாளர் என உயர்ந்தார். பொதுச்செயலாளர் பொறுப்புக்கும் உயர்ந்தார் 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராக வும் தேர்ந்தெடுக்கப்பட்ட சுதாகர் ரெட்டி, ஏ.பி. பரதனுக்குப் பிறகு, சிபிஐ-யின் தேசிய பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டு பணியாற்றினார். அவரின் மறைவுக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், இடதுசாரிக் கட்சிகளின் தலை வர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். சென்னையில் சிபிஐ மாநிலக்குழு அலுவல கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மாநி லச் செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் உள்ளிட்ட தலைவர்கள் எஸ். சுதாகர் ரெட்டி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். சிபிஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மூத்த தலைவர்கள் கோ. பழனிசாமி, மு.வீரபாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர். தோழர் சுதாகர் ரெட்டி மறைவுக்கு சிபிஎம் அரசியல் தலைமைக் குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.