நாடு முழுவதும் கவனம் பெறும் எல்டிஎப் மாடல்உ.பி., குழந்தைக்கு இலவச சிகிச்சை அளித்த கேரள அரசாங்கம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரு கிறது. முதலமைச்சராக கோரக் பூர் மடத்தின் சாமியாரான ஆதித்யநாத் உள்ளார். அம்மாநிலத்தைச் சேர்ந்த சிஷு பால் கேரள மாநிலத்தில் புலம்பெயர் தொழிலாளியாக உள்ளார். இந்நிலை யில் மிக கொடிய நோயால் பாதிக்கப் பட்ட அவரது 4 வயது குழந்தையின் சிகிச்சைக்கான செலவை கேரள அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத் தியக்குழு தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத் தில்,”உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர் சிஷுபால் (புல் வெட்டும் இயந்திரம் இயக்கும் பணி) மற்றும் அவரது மனைவி ரூச்சி ஆகி யோருக்கு ராம்ராஜ் என்ற பெயரில் 4 மாத குழந்தை உள்ளது. இந்த குழந் தைக்கு “ட்ரைகஸ்பிட் அட்ரீசியா (Tricuspid Atresia)” என்ற இதய நோய் இருந்தது. இந்த நோய் இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை வெகுவாக குறைக் கும். இது தொடர்ந்தால் குழந்தை உயி ருக்கே ஆபத்து ஏற்படும் சூழல் உரு வாக்கும். கேரள இடது ஜனநாயக முன் னணி அரசின் “ஹ்ருதயம்” திட்டத்தின் கீழ் குழந்தையைப் பதிவு செய்தனர். குழந்தைக்கு இலவச அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுதான் இடது ஜன நாயக முன்னணி மாடல்” என அதில் கூறப்பட்டுள்ளது.
