tamilnadu

img

நீதிமன்றத்திற்கு சொந்தக் கட்டிடம் கோரி மாதவரத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

நீதிமன்றத்திற்கு சொந்தக் கட்டிடம் கோரி மாதவரத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூலை 26- மாதவரம், மூலக்கடையில் இருந்து மாத வரம் சின்ன ரவுண்டானா செல்லும் எம்.ஆர்.எச். நெடுஞ்சாலை பேருந்து நிலையம் அருகே மாதவரம் நீதிமன்றம் வாடகை கட்டி டத்தில் இயங்கி வருகிறது. இதில் தற்போது தனித்தனியாக குற்றவியல் மற்றும் உரிமை யியல் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. ஆனால் ஒரே ஒரு நீதிபதிதான் விசா ரிக்கும் நிலை தொடர்வதால் ஆயிரத்துக் கும் மேற்பட்ட வழக்குகள் தேக்கமடைந் துள்ளன.  இங்கு கழிப்பறை, இருப்பிடம் இல்லாத தால் பொதுமக்களும், சிறைவாசிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். காவல் துறை வாகனங்கள், சிறைத்துறை வாகனங் கள், வழக்கறிஞர்கள் வாகனங்கள் நீதி மன்றம் அருகே நிறுத்தி வைக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அரசுக்குச் சொந்தமான இடத்தில் நீதிமன்றத்திற்கு கட்டிடம் கட்டித் தர வேண்டும், வழக்கறிகளுக்கு வாதாட போதிய வசதி செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாத வரம் மண்டல அலுவலகம் எதிரே ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவர் ஜெயசீலன், செயலாளர் ஏழுமலை, பொருளாளர் வீ.ஆனந்தன் உட்பட 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.