tamilnadu

‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ துவக்க விழா

‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ துவக்க விழா

திருச்சிற்றம்பலம் பகுதியில்

தஞ்சாவூர், ஜூலை 5 -  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரத்தில், திருச்சிற்றம்பலம் பகுதியில் புதிதாக  கட்டப்பட்டுள்ள துணை வேளாண்மை விரிவாக்க கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து  வைத்தார்.  அதனைத் தொடர்ந்து, பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் குத்து விளக்கேற்றி விரிவாக்க மையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். பின்னர் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தினை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு  பயறு வகை விதைகள், காய்கறி விதைகள் மற்றும் பழக்கன்றுகளை வழங்கினார்.  முன்னதாக, பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.ராணி வரவேற்றுப் பேசுகையில், “இத்திட்டத்தின்கீழ் மரத்துவரை விதை, அவரை விதை, தட்டைப் பயறு விதைகள் அடங்கிய 25 கிராம் அடங்கிய பயறுவகை தொகுப்பு, பப்பாளி, எலுமிச்சை, கொய்யா பழச்செடிகள் அடங்கிய பழச்செடிகள் தொகுப்பு தக்காளி, வெண்டை, கொத்தவரை, கத்தரிக்காய், விதைகள் அடங்கிய காய்கறி விதைத் தொகுப்பு 100 சதவீத மானியத்தில் விவ சாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும். விவசா யிகள் தங்களுக்கு வேண்டிய தொகுப்பை தேர்வு செய்து ஊட்டச்சத்து வேளாண்மை தொகுப்பு தொடர்பான இணைய தளத்தில் பதிவு  செய்து கொள்ளலாம்” என்றார். துணை வேளாண் விரிவாக்க மையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.  சேதுபாவாசத்திரம்   இதேபோல், சேதுபாவாசத்திரம் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் பயனாளிகளுக்கு பயறுவகைகள், காய்கறி விதைகள், பழக்கன்று தொகுப்பை வழங்கினார்.