tamilnadu

img

ஜூலை 15 - 16 வேலைநிறுத்தம் நில அளவை அலுவலர்கள் அறிவிப்பு

ஜூலை 15 - 16 வேலைநிறுத்தம் நில அளவை அலுவலர்கள் அறிவிப்பு

சென்னை, ஜூலை 3 – காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 15-16 தேதிகளில் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று தமிழ்நாடு நில அளவை அலுவ லர்கள் ஒன்றிப்பு அறிவித்துள்ளது. களப் பணியாளர்கள் பணிச்சுமையை குறைக்க வேண்டும், துணை ஆய்வாளர், ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், உயர் அலுவலர்கள் அதிகாரங்களை பறிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று (ஜூலை 3) சென்னையில் பெருந்திரள் முறை யீடு போராட்டம் நடைபெற்றது. அப்போது சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜெ. ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில்,“ நில அளவை அலுவலர் பதிவேடுகளில் பணியாற்றும் களப்பணியாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட நிர்வாகம் அதற்கான உத்தரவுகளை வழங்காமல் உள்ளது. தரம் இறக்கப்பட்ட குறு வட்ட அளவர் பணியிடத்தை நிரப்ப தகுதி வாய்ந்த 150-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் உள்ளனர். அவர்களை பதவி உயர்வின் மூலம் நிரப்ப வேண்டும்” என்றார். நில அளவை துறையில் உள்ள அனைத்துப் பணி யிடங்களும் ஒப்பந்த முறை யில் விடப்பட்டுள்ளது. 80 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புக் காக காத்திருக்கும் போது, அத்துக்கூலி, ஒப்பந்த முறையில் நில அளவை துறையில் நியமனம் செய்வதை கைவிட வேண்டும். அரசாணை 97-இன் படி வீட்டுமனைப் பட்டா வழங்க போதுமான களப் பணியாளர்கள் இல்லை. இதனால் பணிச்சுமை அதிகரித்து, ஊழியர்கள் மன அழுத்தத்தில் உள்ளனர் என்றும் அவர் கூறினார். இந்த போராட்டத்தை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.பி. முருகையன் தொடங்கி வைத்தார். ஒன்றிப்பின் பொதுச்செயலாளர் அண்ணா குபேரன் கோரிக்கையை விளக்கிப் பேசினார். தோழமை சங்கத் தலைவர்கள் போராட்டத்தை ஆதரித்துப் பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மு. விஜயகுமரன் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். ஒன்றிப்பு மாநிலப் பொருளாளர் ஞா.ஸ்டேன்லி நன்றி கூறினார். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மாவட்டம், வட்டம், குறுவட்டம் பிரிக்கும்போது குறுவட்ட அளவர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும், வருவாய்த் துறை நில அளவை பதிவேடுகள் துறை களப்பணியாளர்களுக்கு நீதிமன்ற பயிற்சி வழங்க வேண்டும். அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் ஜூலை 15, 16 வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டிருக்கிறோம் என்றும் ராஜா தெரிவித்தார். முதல்வருடன் சந்திப்பு இந்த போராட்டத்தை தொடர்ந்து முதலமைச்சரைச் சந்தித்து சங்கத்தின் தலைவர்கள் மனு அளித்தனர். அதன்பின்னர், வருவாய்த்துறை செயலாளர் அமுதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.