நில உரிமைப் போராட்டம்
நில உரிமை, குடிமனைப்பட்டா, அனுபவத்தில் உள்ள கோவில் நிலங்களுக்கு பட்டா கேட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று(செப்.30) பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
சாகுபடி நிலத்திற்கு பட்டா கேட்டும், மனைப்பட்டா கேட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு புறம்போக்கு, தரிசு நிலங்களில் பல தலைமுறையாக சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு, நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கும், ஏழை எளிய மக்களின் குடிசை மற்றும் வீடுகளுக்கும் குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் வி.அரிகிருஷ்ணன் தலைமையில் நடந்த போராட்டத்தில் விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் பி.துளசி நாராயணன் பங்கேற்றார். கே.வாசுதேவன், விஜயகாந்த் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
