tamilnadu

img

கும்பகோணம் பரஸ்பர சகாய நிதியின் வணிகம் ஆயிரம் கோடியை கடந்து அபார வளர்ச்சி

கும்பகோணம் பரஸ்பர சகாய நிதியின் வணிகம் ஆயிரம் கோடியை கடந்து அபார வளர்ச்சி

நிதி தலைவர் சு.கல்யாணசுந்தரம் எம்.பி., பேட்டி கும்பகோணம் செப். 26 - கும்பகோணம் பரஸ்பர சகாயநதி லிமிடெட் 121 ஆவது ஆண்டு பேரவை, தஞ்சா வூர் மாவட்டம் கும்பகோணம் தலைமைய கத்தில் நிதியின் தலைவர் எஸ்.கல்யாண சுந்தரம் எம்.பி., தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: கும்பகோணம் பரஸ்பர சகாயநிதி லிமி டெட் நிதியானது 1903 ஆம் ஆண்டு ராவ்பக தூர் கிருஷ்ணசாமி ஐயங்கார் தலைமையி லான குழுவினரால் ஏழை-எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தை சார்ந்த மக்களின் சமூக பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்டதாகும்.  இந்த வர்த்தக செயல்பாட்டு வளர்ச்சி யின் மறைமுக பலனாக படித்த இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது அமைந்துள்ளது. தற்போது 2024-25 நிதியாண்டில் காப்பு பண இருப்பாக  ரூ.582.16 கோடி உயர்ந்து, நிதியின் வர லாற்றில் இதுவரை இல்லாத வகையில், நடப்பாண்டு நிதியின் வணிகம் ரூ.10,258  கோடியாக அபார வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் கம்பெனி சட்ட விதிகள் அனு மதித்த அதிகபட்ச சதவீதமான 25 சதவீதம் பங்கு ஈவுத்தொகை வழங்கப்படுகிறது. நிதி நிறுவனத்தில் சுமார் ஆயிரம் ஊழி யர்கள் பணியாற்றுகின்றனர். நிதி ஊழியர் களுக்கு போனஸ் மற்றும் கருணைத்தொ கையாக 75 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் புதிய ஒப்பந்தம் மூலம்  ஊழி யர்களுக்கு ரூ.44.28 கோடிகளாக ஊதி யம் உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய வைப்பு நிதியாக ரூ.5173.09 கோடியும், கடன்கள் ரூ.5085.21 கோடியும், மொத்த வணிகம் ரூ.10258 கோடியாகவும் உள்ளது. இச்சாதனையை படைத்திட்ட நிதி யின் அனைத்து ஊழியர்களையும் ஊக்கு விக்கும் வகையில், 5 சதவீத கருணைத் தொகையும், பயிற்சி ஊழியர்களுக்கு மாதம்  ஆயிரம் கணக்கிட்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் வாடிக்கையாளர்களுக்கு விரைவான சேவையை வழங்க மென்பொ ருள் நிறுவப்பட்டுள்ளதால், மனித ஆற்றல் 30 சதவீத அளவிற்கு சேமிக்கப்பட்டு விரை வான சேவை செய்யப்படுகிறது. ஏற்கனவே  அனுமதி பெற்றதில் இதுவரை 36 கிளை கள் திறக்கப்பட்டுள்ளன. 12 கிளைகள் திறக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  50 கிளைகள் புதிதாக திறப்பதற்கு அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 150  கிளைகளாக செயல்பட்டு வருகிறது. கம்பெனிகள் சமுதாய பொறுப்பு திட்டத்தின் கீழ் 2024-25 நிதி ஆண்டில் செலவிட்ட தொகை ரூ.1.92 கோடி. பொது மக்கள் பயன்பெறும் வகையில் நமது நிறுவனம் மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்கள், கல்வி மேம்பாட்டிற்கும், சுத்த மான குடிநீர் வழங்குவதற்கும், மருத்துவம் சார்ந்த நல்ல திட்டங்களுக்கும் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் உதவி புரிந்து வருகிறது. கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி  நிறுவனத்தில் வைப்புத் தொகை வைக்கும்  வாடிக்கையாளர்களுக்கு இலவச பாது காப்பு பெட்டக வசதியும் செய்து கொடுக்கப் படுகிறது. நிதி நிறுவனங்களுக்கு ஒன்றிய  அரசு விதித்திருக்கும் புதிய சட்டத்தை தளர்த்தி தனிநபர் கடன் ரூ-15 லட்சத்தி லிருந்து ரூ.50 லட்சம் கொடுக்கவும் அனுமதி கோரப்பட்டுள்ளது. தற்போது ஆயிரம் கோடி ரூபாய் சொந்த  மூலதனமாக உள்ளது. நிதி நிறுவனத்தின் மதிப்பு ஒன்றரை மடங்கு அதிகமாக இருக்கிறது.  இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது துணைத் தலைவர் ராமலிங்கம், மேலாண்மை இயக்குநர் வேலப்பன், இயக்குநர்கள் அன்பழகன், பிரகாசம், துரைராஜ், அம்பிகா, குருபிரசாத் மற்றும் நிதியின் அதிகாரிகள், ஊழியர்கள் உடனிருந்தனர்.