தூத்துக்குடி, ஜன. 16- தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17,18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை மற்றும் வெள்ள பெருக்கு காரணமாக தூத்துக் குடி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கடுமை யான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலை யம், அரசு பள்ளிகள், தெருக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில தலை வர் கார்த்தி, மாநில செயலாளர் சிங்காரவேலன் ஆகியோர் தலை மையில் தூத்துக்குடி, திருநெல் வேலி, விருதுநகர், மதுரை, மயிலாடுதுறை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்க த்தினர் கடந்த 24 ஆம் தேதி முதல் சுமார் 7 நாட்களாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாநகர பகுதி, புல்வாவெலி, ஆத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி, உமரிக்காடு அரசு மேல்நிலை பள்ளி, சிறு தொண்டநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி, கணேசபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலை யம், அரசு மேல் நிலைப்பள்ளி, ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஏரல் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றை மிகுந்த அர்ப்பணிப்போடு, அக்கறையு டன், சேறையும் சகதியையும் சுத்தம் செய்தனர். அதேபோல் இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் சம்சீர் அகமது, மாநில செயலாளர் அரவிந்த் சாமி , மாவட்ட த்தலைவர் கிஷோர் குமார் ஆகியோர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புனித மரியன்னை ஆண்கள் மேல் நிலை பள்ளி, சிவ அரசு பள்ளி, சொரிஸ் புரம் அரசு பள்ளி, ஆகியவற்றை சுத்தம் செய்தனர். அர்ப்பணிப்போடு செயல் பட்ட இந்திய ஜனநாயக வாலி பர் சங்க, இந்திய மாணவர் சங்க தோழர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துப் குடி மாவட்டக்குழு சார்பில் மாசிலாமணி புரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் பாராட்டு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிபிஎம் தூத்துக்குடி மாவட்ட செயலா ளர் கே.பி.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறந்த முறையில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய இந்திய ஜன நாயக வாலிபர் சங்க தோழர் களை வாழ்த்தி பேசி, பாராட்டு கேடயம், மற்றும் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாநிலக்குழு உறுப்பினர் பி.பூமயில், மாநகர் செயலாளர் தா. ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.எஸ்.முத்து, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் தினேஷ், மாவட்ட செயலாளர் சுரேஷ், மாணவர் சங்க மாவட்ட தலை வர் கிஷோர் குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.