tamilnadu

img

25 ஆண்டுகால வளர்ச்சிப் பார்வையை பிரதிபலிக்கிறது

திருவனந்தபுரம், மார்ச் 12- கேரளத்தில் 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சிக்கான பார்வை மற்றும் மாற்றுக் கொள்கைகளை மாநில பட்ஜெட் பிரதி பலிக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் கூறினார். கேரளாவை அறிவுசார் சமுதாயமாக மாற்றவும், உற்பத்தி யுடன் இணைக்கவும் உரிய நடவடிக்கைகளை பட்ஜெட் முன்வைக்கிறது என்றார் கொடியேரி. வெள்ளியன்று கேரள சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் சமர்ப்பித்த பட்ஜெட் குறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்ப தாவது:  வேளாண் உற்பத்தி பொருட்களின் மதிப்புக் கூட்டல் மூலம் கேரளாவின் விவசா யத் துறையை பாதுகாக்கும் அணுகுமுறை பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வளர்ச்சிக்கு கூட்டுறவுத் துறையைப் பயன்படுத்துவ தற்கான திட்டங்களையும் இது முன்மொழி கிறது.

தகவல் தொழில்நுட்பத் துறையை வலுப்படுத்தவும், ஸ்டார்ட்அப்களை ஊக்கு விக்கவும் கூறப்பட்டுள்ள முன்மொழிவுகள் படித்தவர்களின் வேலை வாய்ப்புகளை உரு வாக்கும் வகையில் உள்ளன. பாரம்பரியத் துறையை நவீனமயமாக்கி பாதுகாக்கும் அணுகுமுறை பட்ஜெட்டின் மற்றொரு சிறப்பு. புவி வெப்பமடைதல் மற்றும் அது உரு வாக்கும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட தற்போதைய பிரச்சனைகளை பட்ஜெட் கையாள்வதோடு, புவி வெப்பமடைதல் மற்றும் போர் எதிர்ப்பு விழிப்புணர்வு ஆகிய வற்றில் கவனம் செலுத்துகிறது. கேரளாவின் வளர்ச்சிக்கு தனியார் மூலதனத்தை ஈர்க்க உதவும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் இந்த பட்ஜெட் உந்துதல் வழங்குகிறது. பட்டியல் சாதியினர், பழங்கு டியினர், மீனவர்கள் மற்றும் பெண்கள் நல னுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பை வழங்கு வதில் மழைக்காடு திட்டம் குறிப்பிடத்தக்கது. இந்த அணுகுமுறையின் தொடர்ச்சியே பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரின் கல்விப் பலன்களை அதிகரிக்கும் நட வடிக்கை. வாழ்வியல் முறை நோய்களால் பாதிக் கப்பட்டுள்ள கேரளாவில் புதிய விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்கும் தொலை நோக்கு திட்டங்களையும் பட்ஜெட் முன் வைக்கிறது. சுகாதாரத் துறையில் கேரளா வை ஒரு சிறந்த மையமாக மாற்றும் ஆற்றலும் இதில் உள்ளது. இந்த பட்ஜெட் முழுவதும், அடுத்த 25 ஆண்டுகளில் நமது சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உயர்த்தும் அணுகுமுறையை கொண்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக வறுமை ஒழிப்பு, வீடற்றோர் இல்லா கேரளா மற்றும் அனைவருக்கும் சுத்தமான தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்படும். அதிகாரப் பரவலாக்கத்தை திறம்படச் செயல்படுத்துதல், மக்களுக்கு அரசு சேவை களை வழங்குதல், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், விலை உயர்வைத் தடுத்தல், உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், புதுமையான ஆராய்ச்சித் துறைகளில் முன் னேற்றம் போன்றவை அதன் தொடர்ச்சி யாகும். பொதுத்துறையை பலவீனப்படுத் தும் கொள்கைக்கு மாற்றாக இந்த பட்ஜெட் உள்ளது. விவசாயம், சமூக பாதுகாப்பு துறை களில் இருந்து விலகும் அரசாங்கங்களின் உலகமயமாக்கல் கொள்கைகளில் இருந்து பொதுத்துறையை பாதுகாப்பதில் முக்கியத்து வம் வாய்ந்த ஒரு மாற்று அணுகுமுறையை இந்த பட்ஜெட் ஊக்குவிக்கிறது. இந்த பட்ஜெட் புதிய கேரளாவை உருவாக்கும் அரசின் தலை யீட்டின் மற்றொரு படியாகும் என கொடியேரி பாலகிருஷ்ணன் அறிக்கையில் தெரி வித்துள்ளார்.