தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அக்டோபர் 13, 14 தேதிகளில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முன்னதாக திங்களன்று மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொடிமங்கலம் நாகதீர்த்தம் வைகை ஆறு பகுதியில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். பணிகளை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் ஆகியோர் பார்வையிட்டனர்.