முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கேரள அமைச்சர் சந்திப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வெள்ளியன்று (ஆக.22) தலைமைச் செயலகத்தில், கேரள மாநில கூட்டுறவு, துறைமுகங்கள் மற்றும் தேவசம் போர்டு அமைச்சர் வி.என்.வாசவன் நேரில் சந்தித்து, திருவிதாங்கூர் தேவசம் போர்டு பவள விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென்று அழைப்பு விடுத்தார். உடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க.மணிவாசன், தேவசம் போர்டு, வருவாய் மற்றும் உணவுத் துறை செயலாளர் எம்.ஜி.ராஜமாணிக்கம், திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆணையர் பி.சுனில்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.