திருவனந்தபுரம், நவ.30- கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானங்களை இரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைத்து ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார் என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றத்தை ஆளுநர் அவமதிப்பு செய்துள்ளதாக கேரள நீதித்துறை அமைச்சர் பி.ராஜீவ் குற்றம்சாட்டினார். கேரள ஆளுநர் நிறுத்தி வைத்த மசோதாக்கள் குறித்து செய்தியாளர்களி டம் வியாழனன்று (நவ.30) பேசிய ஆரிப் முகமதுகான், ‘குடியரசு தலைவரைத் தவிர தான் யாருக்கும் கட்டுப்பட வேண்டி யதில்லை’ என கூறினார். இதுகுறித்து விமர்சித்த சட்டத்துறை அமைச்சர் பி.ராஜீவ், இதன் மூலம் ஆளுநர் உச்சநீதி மன்றத்தை அவமதிப்பு செய்துள்ளார். குடியரசு தலைவருக்கு எதிரான உத்தரவு பிறப்பிக்கவும் உச்சநீதிமன்றத்துக்கு அதி காரம் உள்ளது. நாட்டின் உயர்ந்த நீதிபீட மான உச்சநீதிமன்றத்துக்கு அனைவரும் கட்டுப்பட்டவர்கள் என்றார். ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் ஆளுநரின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலக்குழு சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் வியாழனன்று மாலை நடை பெற்றது. வாலிபர் சங்க மாநிலச் செய லாளர் வி.கே.சனோஜ் உள்ளிட்டோர் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து பேசினார்கள். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர்.