tamilnadu

கே ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி

திருவனந்தபுரம், பிப். 4- கே ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு  அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் கே.என்.பாலகோபால் கூறியுள்ளார்.  இதுதொடர்பாக ரயில்வே அமைச்ச கம் கடிதம் அளித்துள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழி நடத்துகின்றன என்றும் பாலகோபால் கூறினார். கே ரயில் திட்டத்தை தொடர சாதக மாக ஒன்றிய நிதி அமைச்சகமும் கடிதம் அளித்துள்ளது. இதற்கான அனுமதியை ஒன்றிய முதன்மை செயலர் வழங்கி னார். கேரள மக்கள் நலன் கருதி செயல்படுகிறது. 2019 இல் கொள்கை யளவில் கே ரயிலுக்கான அனுமதி  வழங்கப்பட்டது. இது தொடர்பாக கடி தம் இருப்பதாக கூறுவது சரியா னது என்றும், இறுதி அனுமதி பெறு வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும் அமைச்சர்கூறினார்.