tamilnadu

img

அடிப்படை வசதிகள் இல்லாத கண்டாச்சிபுரம் ஊராட்சி பகுதி

அடிப்படை வசதிகள் இல்லாத  கண்டாச்சிபுரம் ஊராட்சி பகுதி 

சிபிஎம் தொடர் முழக்கப் போராட்டம்

விழுப்புரம், ஆக. 4- கண்டாச்சிபுரம் ஊராட்சி மக்களின் அடிப்படை தேவைக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டாச்சி புரம் வட்டமாக தகுதி பெற்று, வட்டமாக மாறி 9 ஆண்டுகள் ஆகியும் இதுவரை வட்ட மருத்துவமனை மற்றும் நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து வட்ட அரசு அலுவலகங்கள் அமைக்கப்படவில்லை. எனவே, உடனடியாக வட்ட மருத்துவமனை மற்றும் நீதிமன்றம் உட்பட தேவையான அனைத்து அரசு அலுவலகங்கள் கொண்டு வரவேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை வரும் குடிநீரை தினந்தோறும் வரும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் கண்டாச்சிபுரம்-அனந்தபுரம் கூட்டுக்குடி நீர் திட்டத்தை புனரமைப்பு செய்து, தினசரி ஆற்று குடிநீர் வழங்குவதை உறுதி படுத்த வேண்டும். பழுதடைந்துள்ள 25-க்கும் மேற்பட்ட அனைத்து மினி டேங்க் மற்றும் மோட்டார்களை உடனடியாக புதுப்பிக்க வேண்டும்.  அனைத்து வார்டு மக்களுக்கும் சுழற்சி முறையில் 100 நாள் வேலையினை வழங்கி, கூலி உடனடியாக வழங்க வேண்டும். கண்டாச்சிபுரம்-நல்லாப்பாளையம்-கடையம்-பனமலைப்பேட்டை ஆகிய சாலைகளை அகலப்படுத்த வேண்டும், தும்பரமேடு-சிராபாளையம் ஏரிவரை தார் சாலை அமைக்க வேண்டும். விடுபட்ட தெருக்களுக்கு கழிவுநீர் வாய்க்கல், சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும். டாக்டர்.அம்பேத்கர் நகர், இந்திரா நகர், மடவிளாகம் ஆதிதிராவிடர் குடியிருப்புகளின் நீண்ட காலமாக வசிக்கும் குடும்பங்களுக்கு கணினி திருத்தம் செய்து இலவச பட்டா வழங்கவேண்டும். அரசு தொடக்கப்பள்ளி, அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பறை மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தொடர் முழுக்க போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு கிளைச் செயலாளர்கள் ஜெ.ஆறுமுகம், எம்.ஸ்ரீதர், எம்.ஏழுமலை ஆகி யோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.வேல்மாறன், வட்டச் செயலாளர் எஸ்.கணபதி, சிஐடியு மாநிலக் குழு வி.உதயகுமார், மாவட்டக் குழு ஆர்.தாண்டவராயன், எம்.முத்து வேல் ஆகியோர் கலந்து கோரிக்கைகளை வலி யுறுத்தி உரையாற்றினர். வட்டக் குழு உறுப்பி னர்கள் வி.உமா மகேஸ்வரி, ஏ.ஆர்.கே.தமிழ்ச் செல்வன், பி.முருகன், கிளைச் செயலாளர்கள் சி.முனுசாமி, பி.முருகன், ஜி.செந்தாமரை கண்ணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தையொட்டி, பாடை கட்டி வீதி களில் முழக்கங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து விழுப்புரம்-திருவண்ணாமலை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், கிராம ஊராட்சிகளின் முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கலந்து கொண்டு, இரண்டு நாட்கள் கண்டாச்சிபுரம் ஊராட்சியில் தங்கி, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இரண்டு நாட்களுக்கு பிறகு கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடுகள் செய்வதாகவும் கூறினார். அதை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து கலைந்து சென்றனர்.