கமல்ஹாசனுக்கு தெலுங்கானா அரசின் உயரிய விருது
சென்னை: ஹைதராபாத்தில் மார்ச் 19 அன்று நடை பெற்ற ‘தெலுங்கான கட்டர் திரைப்பட விருதுகள் 2025’ விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு தெலுங்கானா அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது வழங்கப் பட்டது. தெலுங்கானா முதலமைச்சர் அனுமுலா ரேவந்த் ரெட்டி இந்த விருதை வழங்கினார். இந்தியத் திரையுலகில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பங்காற்றி வரும் கமல்ஹாசனின் பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டது. ‘சாகர சங்கமம்’, ‘சுவாதி முத்யம்’ உள்ளிட்ட தெலுங்கு திரைப்படங்களில் அவர் ஆற்றிய சேவையை இந்த விருது சிறப்பிக்கிறது. பன்மொழி சினிமாவிற்கு ஆரம்ப காலத்திலேயே அடித்தளம் அமைத்தவர் என்று அவர் பாராட்டப்பட்டார்.
