குரங்குகளே!
என்னை மன்னியுங்கள்!
உங்களை
அவர்களோடு ஒப்பிடுவதற்காக!
தாவுவது உங்கள் இயல்பு
துரோகம் நீங்கள் அறியாதது
பிய்த்தெறிவது உங்கள் குணம்
வெறுப்பும் வெறியும் உங்களுக்கு கிடையாது
என் பாட்டி சொன்னார்
குல்லாவைக்கூட நீங்கள் திருடவில்லை
விளையாட்டாக எடுத்தீர்கள்
திருப்பி தந்துவிட்டீர்கள்!
உங்கள் வாலில் தீப்பந்தம்
நீங்களே கொளுத்தியதல்ல…
அது புராணப் புளுகு!
குரங்குகளே!
என்னை மன்னியுங்கள்
உங்களை
அவர்களோடு ஒப்பிடுவதற்காக!
குரங்குகளே!
இங்கே பாருங்கள்!
மதவெறி மாந்தி
அதிகாரத் திமிரோடு
வாலில் நெருப்போடு
குடிசைகள், பஞ்சுமூட்டைகள்
புத்தகக் கிடங்குகள்,
அடுத்தவர் வழிபாட்டிடங்கள்,
உண்ணும் உணவு
உடுத்தும் உடை
எங்கும் தாவித்தாவி
எரித்துக் கொண்டே இருக்கிறது
மதவெறி அதிகாரக் குரங்கு!
வெறி தலைக்கேறி
வாலில் நெருப்போடு
பெட்ரோல் தொட்டியில்
குதிக்கும் நாள் நெருங்கிவிட்டது!
குரங்குகளே!
என்னை மன்னியுங்கள்
உங்களை
அவர்களோடு ஒப்பிடுவதற்காக!