ஜூலை 9 வேலைநிறுத்தம்: அங்கன்வாடி ஊழியர்கள் பங்கேற்பு
சென்னை: மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் சம்மேள னங்கள் சார்பில் ஜூலை 9 அன்று நடைபெறும் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் முழுமையாக பங்கேற்கிறது. அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவி யாளர்களின் ஜனநாயக மற்றும் தொழிற்சங்க உரிமை களை அங்கீகரிக்க வேண்டும், குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவி யாளர்களை 3 மற்றும் 4ஆம் நிலை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டும், ஐசிடிஎஸ்-ஐ எந்த வடிவத்திலும் தனி யார்மயமாக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் பங்கேற்பதாக சங்கத் தின் பொதுச் செயலாளர் டி.டெய்சி தெரிவித்துள்ளார்.
பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு சுமார் 2 லட்சம் சேர்க்கை இடங்கள் உள்ளன. இந்த இடங்க ளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திங்களன்று காலை 10 மணி முதல் தொடங்கியது. நடப்பாண்டு 2,41,641 பேர் பொறியியல், பி.டெக் படிப்புகளில் சேர தகுதி பெற்றுள்ளனர். 144 மாணவ மாணவியர் 200க்கு 200 கட்- ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்களில் 139 பேர் தமிழ் நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள். பொறியி யல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது.
31.40 லட்சம் பேர் வேலைக்காக பதிவு
சென்னை: தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவ லகங்களில், கடந்த ஜூன் 30 வரை 31.40 லட்சம் பேர் வேலை கேட்டு பதிவு செய்துள்ளனர். இதில் 14.09 லட்சம் ஆண்களும், 17.31 லட்சம் பெண்களும், 257 மாற்றுப் பாலி னத்தவர்களும் அடங்குவர். வயது அடிப்படையில், 6.03 லட்சம் பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். 12.26 லட்சம் பேர் 19 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். 10.75 லட்சம் பேர், 31 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள். 46 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 2.36 லட்சம் பேர். 60 வயதுக்கு மேற்பட்டோர் 8,791 பேர். கடந்த மூன்று மாதங்களில் வேலைக்காக பதிவு செய்திருந்தவர்களின் எண்ணிக்கை 95,742 குறைந்துள்ளது. பதிவு செய்துள்ளவர்களில் 1.53 லட்சம் பேர் மாற்றுத்திறனாளிகள் என்று வேலை வாய்ப்பு துறை தெரிவித்துள்ளது.
‘சமூக நீதி விடுதிகள்’
சென்னை: தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதி கள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். “இரத்த பேதம் இல்லை, பால் பேதம் இல்லை என்பதுதான் திராவிட இயக்கத்தின் தோற்றத்துக்கு அடிப்படையான கருது கோள்கள். சாதியின் பெயரால், மதத்தின் பேரால், பொருளா தார வலிமையின்மையால் எந்த வாய்ப்பும் யாருக்கும் மறுக்கப்படக் கூடாது” என்று முதலமைச்சர் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,739 விடுதிகளில் 1,79,568 மாணவ-மாணவியர்கள் பயன்பெற்று வரு கின்றனர். விடுதிகளுக்கு புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளதே தவிர, மாணவர்களுக்கான உரிமைகள், சலுகைகள், உதவிகள் அனைத்தும் அப்படியே தொடரும் என்று அரசு தெரிவித்து உள்ளது.
தோனிக்கு முதலமைச்சர் வாழ்த்து
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி திங்களன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில், “அழுத்தமான சூழ்நிலையையும் தனது ஒவ்வொரு நகர்வின் மூலம் கவிதையாய் மாற்றிய கிரிக்கெட் தனித்துவமிக்க அரிய வீரர் மகேந்திர சிங் தோனிக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்து கள். பெருமை பிறப்பிலேயே வருவதல்ல; எடுக்கும் ஒவ்வொரு முடிவினாலும், ஒவ்வொரு ஓட்டத்தினாலும், அமைதியாக ஈட்டு கின்ற ஒவ்வொரு வெற்றியாலும் கட்டமைக்கப்படுவது அது என நீங்கள் காட்டியிருக்கிறீர்கள்” என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்
. ஜாமீன் கோரி மனு: இன்று தீர்ப்பு!
சென்னை: போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் கோரிய மனுக்கள் மீது செவ்வாயன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் மனுக்கள் மீதான தீர்ப்பை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம். இருவரின் ஜாமீன் மனுக்களை சிறப்பு நீதி மன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.