ஜூலை 9 அகில இந்திய வேலைநிறுத்தம்
வங்கி, இன்சூரன்ஸ் ஊழியர்கள் பிரச்சாரம்
திருச்சிராப்பள்ளி, ஜூலை 5 - இன்சூரன்ஸ் துறையில் நூறு சதவீத நேரடி அந்நிய முதலீட்டு கொள்கையை ரத்து செய்ய வேண்டும். வங்கிகள், தொலைத்தொடர்பு, ரயில்வே, மின்சாரம், நிலக்கரி, சுரங்கங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் சாலை போக்குவரத்து போன்றவற்றை தனியார்மயம் ஆக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்க சார்பில் ஜூலை 9 அன்று பொதுவேலை நிறுத்தம் மற்றும் மறியல் நடைபெற உள்ளது. இதன் விளக்கி சிஐடியு, இன்சூரன்ஸ், (எல்.ஐ.சி , ஜி.எஸ்.சி) இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்கம், வங்கி, ரயில்வே, பிஎஸ்என்எல், போக்குவரத்து, அரசு ஊழியர் சங்கம் மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வெள்ளியன்று பீமநகரில் பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் தஞ்சைக் கோட்ட துணைத் தலைவர் ஜோன்ஸ் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்டத் தலைவர் சீனிவாசன், டிஆர்இயு கோட்ட செயலர் கரிகாலன், பி.எஸ்.என் எல்.இ.யு முன்னாள் மாநில பொருளாளர் அஸ்லாம் பாட்சா, பிஇஎப்ஐ மாநில இணைச் செயலாளர் ஹேமன்த் குமார், எம்.ஆர்.ஜி.ஐ. இ.ஏ. மதுரை மண்டல இணைச் செயலர் முத்துகுமார் ஆகியோர் பேசினர். இதில் சிஐடியு, இன்சூரன்ஸ் (LIC, GIC), பிஎஸ்என்எல், வங்கி, போக்குவரத்து மற்றும் ஓய்வூதியர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்க பொறுப்பாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பிரச்சாரம்
திருச்சிராப்பள்ளி, ஜூலை 5 - ஒன்றிய மோடி அரசு பொதுத் துறைக்கு எதிராக கொண்டு வரும் சட்டங்களை முறி யடிக்கும் வகையிலும், ஜூலை 9 அன்று நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தம், மறியல் விளக்க பிரச்சா ரம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்றது. திருச்சி புறநகர் மாவட்டம் திருவெறும் பூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்க ளில் பத்தாளபேட்டையில் துவங்கி கிருஷ்ண சமுத்திரம், கூத்தைபர், குமரேசபுரம், எழில்நகர் உள்ளிட்ட இடங்களில் பிரச்சா ரம் நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். இதில் சிபிஎம் வடக்கு ஒன்றியச் செயலா ளர் ரவிக்குமார், தமிழ்ச்செல்வன், அன்பழகன், மகாலிங்கம், ஜோதி ராமலிங்கம், ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
டிஎன்பிஎல் ஆலை முன்பு விளக்க கூட்டம்
கரூர், ஜூலை 5 - ஜூலை 9 அன்று நடைபெற உள்ள அகில இந்திய வேலைநிறுத்த மறியல் போராட்டத்தை விளக்கி கரூர் மாவட்டம், புகளூர் காகித ஆலை முன்பு கரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த விளக்க கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு தொமுச மாவட்டத் தலைவர் அண்ணாவேலு தலைமை வகித் தார். சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவா னந்தம், தொமுச மாவட்டச் செயலாளர் பழ. அப்பாசாமி, எல்எல்எப் மாவட்டச் செயலா ளர் சுடர்வளவன், டிஎன்பிஎல் தொழிலாளர் சங்க தலைவர் அரவிந்த், செயலாளர் மகேஸ், தொமுச காகித ஆலை சங்க செய லாளர் சந்தோஷ், பொருளாளர் சேதுராமன் ஆகியோர் பேசினர்.