முதல்வருக்கு ஜாக்டோ - ஜியோ பாராட்டு விழா
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகளை செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஞாயிறன்று (பிப்.8) சென்னையில் ஜாக்டோ–ஜியோ சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் முதலமைச்சரிடம் ஜாக்டோ–ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கை சாசனத்தை வழங்கினர்.
