சென்னை, செப். 18- காவிரி நதிநீர் பிரச்சனை யில் ஒன்றிய அரசு தலை யிட்டு, தமிழ்நாட்டுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத் தரக்கோரி, தமிழ் நாட்டின் அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவினர் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தில்லி சென்றனர். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் களை சந்தித்த துரைமுரு கன், “காவிரி நதிநீர் ஒழுங்கு முறை ஆணையம் கர்நாடக அரசை, தமிழ்நாட்டிற்கு உடனடியாக 5,000 கன அடி நீர் திறந்து விட உத்தரவிட்டி ருந்தது. ஆனால் கர்நாடக மாநில அரசு ஒரு சொட்டு தண்ணீர் கூட, காவிரி நதிநீர் ஆணையம் கூறியபடி திறந்து விடவில்லை. காவிரி நதிநீர் ஆணை யம், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஒன்றிய அரசு தான் அமைத்தது. எனவே இப்போது ஒன்றிய அரசிடம் முறையிட, தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் எம்.பி.க்கள் குழு தில்லி செல்கிறது” என்றார். காவிரி தண்ணீர் விவகாரத்தில், கர்நாடகா மாநில அரசு ஒவ்வொன் றுக்கும் எதிர்ப்பு தெரி வித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றத் தின் தயவை நாடி தான், கர் நாடக மாநிலத்திடம் இருந்து, தமிழ்நாடு தண்ணீரை பெற்று வருகிறது. இது நியாயமானது அல்ல என்பது என் கருத்து என்றும் அவர் தெரிவித்தார். கர்நாடகா காவிரியில் தண்ணீர் இல்லை என்று கூறுகிறது. நாம் தண்ணீர் இருக்கிறது என்று கூறு கிறோம். ஆனால் காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம், கண்ணை மூடிக்கொண்டு எதுவும் சொல்லவில்லை. அவர்கள் கர்நாடக மாநிலத்திற்கு சென்று ஆய்வு நடத்தி விட்டு, அங்கு தண்ணீர் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு தான், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடும்படி கூறியி ருக்கிறார்கள். எனவே கர்நாடகா அரசு தண்ணீர் இல்லை, வறட்சி நிலவுகி றது என்று உண்மைக்கு மாறான காரணத்தை கூறி வருகிறது என்றும் அவர் கூறினார்.