tamilnadu

img

அரசுப் பள்ளியில் படித்தாலும் சாதிக்க முடியும்

சென்னை,ஜூன்  “அரசுப் பள்ளியில், தமிழ் வழியில் படித்  தாலும் நிச்சயம் முன்னேற முடியும்” என்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ்,   12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்  களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி சென்னை நேரு  உள்விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை யன்று (ஜூன் 25) நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி யது வருமாறு: 12 ஆம் வகுப்பை முடித்தோம் - கல்லூரி யில் சேர்ந்தோம் - பட்டம் வாங்கினோம் - வேலையில் சேர்ந்தோம் -கைநிறைய சம்ப ளம் வாங்கினோம் என்பதோடு உங்கள் கடமை முடிந்துவிடுவது இல்லை. எத்த கைய ஆற்றல் படைத்தவர்களாக நீங்கள் உயர்ந்தீர்கள், அத்தகைய ஆற்றலை வைத்து இந்தச் சமூகத்தை எப்படி மேம்படுத்த முயன்றீர்கள் என்பதுதான் முக்கியம். 

ஒவ்வொரு நாளும் செய்தித்தாளை விநியோகம் செய்த அப்துல் கலாம் அரசுப் பள்ளியில் படித்தவர்தான். சந்திராயன் புகழ் மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோ தலைவராக இருந்த சிவன் இருவரும் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள். ஏன்! இந்த மேடையில் அமர்ந்திருக்கும் தலை மைச் செயலாளர் வெ.இறையன்பும் அரசுப்  பள்ளியில் படித்தவர். காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபும் அரசுப் பள்ளியில் படித்தவர்தான். அரசுப்  பள்ளியில் படித்த பலரும் பல துறைகளில்  மிகச் சிறந்த ஆளுமைகளாக உருவாகி இருக்கிறார்கள். ஆகவே அரசுப் பள்ளியில்,  அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து, அவரவர் துறையில் கோலோச்சிக் கொண்டி ருக்கிறார்கள். ஆகவே அரசுப் பள்ளியில், தமிழ் வழியில் படித்தாலும், நிச்சயம் முன்  னேற முடியும் என்பதற்கு, நம் கண்முன்னா லேயே மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகள் இருக்கிறார்கள். அனைவரும் படிக்க வேண்டும் என்ப தற்காக உருவான இயக்கம்தான் திராவிட இயக்கம். அதற்கான வாசற்படிதான் சமூக நீதி! அந்தச் சமூகநீதியை, இட ஒதுக்கீட்டு உரிமையை சட்டமாக்கி வித்திட்டது. மாணவர்களுக்கும் பெற்றோர்களுக் கும் என்னுடைய அன்பான ஒரு வேண்டு கோள். பொறியியல், மருத்துவம் என்பது  மிகச் சிறந்த படிப்புகள்தான். ஆனால், அந்த இரண்டு கனவுகளோடு மட்டும் நின்றுவிட வேண்டாம். இன்று வாய்ப்புகள் எல்லாத் துறைகளிலும் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் படித்து முன்னேறி, உழைப்பைக் கொடுத்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கின்றன.

ஆகவே, கிடைக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி, அந்தந்தத் துறையில் மிகச் சிறந்த வல்லுநர்கள் ஆவதற்கு, கல்வி நிறு வனங்கள் அளிக்கும் பாடப்பிரிவுகள் குறித்  தான ஒரு வழிகாட்டி நிகழ்ச்சிதான் இது. உலக அளவில் ஒவ்வொரு துறையிலும், வெற்றி பெற்றவர்களை உற்றுப் பாருங்கள். அவர்கள் அனைவருமே, தங்களுக்குப்  பிடித்தமான துறையைத் தேர்ந்தெடுத்தி ருப்பவர்களாக, அந்தந்தத் துறையில், அள வுக்கதிகமாக கடுமையாக உழைத்தி ருப்பார்கள். பிடித்த துறையைத் தேர்ந்தெ டுப்பதும், கடும் உழைப்புமே ஒவ்வொரு வருடைய வெற்றிக்கு மிக மிக முக்கியமான காரணமாக அமைந்திருக்கிறது. ஆகவே  நீங்களும், உங்களுக்குப் பிடித்தமான துறை யைத் தேர்ந்தெடுங்கள். அதில் அதிகமான உழைப்பைக் கொடுங்கள்! உங்களுடைய வெற்றி நிச்சயம். பட்டத்தைத் தாண்டிய தனித்திறமை இருந்தால்தான் நீங்கள் தனித்து ஜொலிக்க முடியும், பிரகாசிக்க முடியும். அதற்கு தன்னம்பிக்கை வேண்டும். நம்மால் முடி யும் என்ற தைரியம் வேண்டும். நல்ல மொழி யாற்றல் வேண்டும். தமிழ் மொழியாக இருக்  கக்கூடிய நம்முடைய தாய்மொழியான தமி ழிலும் உலக மொழியாக இருக்கக்கூடிய ஆங்கிலத்திலும் எழுத, பேச, படிக்கத் தெரிந்  திருக்க வேண்டும். அதே நேரத்தில் அது  பகுத்தறிவாக இருக்க வேண்டும் என்பது தான் மிக மிக முக்கியம், அதை மறந்து விடக் கூடாது. இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

;