tamilnadu

img

இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் அசத்தல் ககன்யான் திட்டத்தின் வான்வழி டிராப் சோதனை அபார வெற்றி

இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் அசத்தல் ககன்யான் திட்டத்தின் வான்வழி  டிராப் சோதனை அபார வெற்றி

புவனேஸ்வரம், ஆக. 24- இந்திய வானியல் ஆராய்ச்சியில் மிக முக்கிய பங்களிப்பாக மனிதர் களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் “ககன்யான்” ஆகும். இந்த திட்டத்திற்காக விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப் படுகிறது. இந்நிலையில், இந்த ககன்யான் திட்டத்திற்காக ஒரு முக்கிய தொழில் நுட்ப மைல்கல்லை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) எட்டியுள்ளது. விண்வெளிக்குச் செல்லும் குழுவினர் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்புவதை உறுதி செய்யும் “ஒருங்கிணைந்த வான்வழி டிராப் சோதனை (IADT-01)” ஞாயி றன்று ஒடிசா கடற்கரையில் ந்டை பெற்றது. விண்வெளியில் இருந்து மனி தர்களை சுமந்து வரும் விண்வெளி ஓடத்தை கடலில் இருந்து மீட்டெடுக்கும் சோதனையானது, இந்திய விமானப் படையின் உதவியுடன் ஒரு போலி குழு தொகுதி (Crew Module) விமானத்தி லிருந்து கீழே விடப்பட்டு பிரத்யேக மாக வடிவமைக்கப்பட்ட பல-நிலை கொண்ட பாராசூட் அமைப்பு மூலம் மெதுவாக தரையிறக்கப்பட்டது. சோதனை முடிவில் பாராசூட் அமைப்பு எதிர்பார்த்தபடி செயல்பட்டு, போலி தொகுதி பாதுகாப்பாக தரை யிறங்கியது. இஸ்ரோ, டிஆர்டிஓ, இந்திய விமானப்படை, கடற்படை என பல துறைகள் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் இந்த சோத னை நடத்தப்பட்டது. இந்த சோதனை யின் வெற்றி, ககன்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு தொடக்கம் தான் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். அடுத்து ஆளில்லா முதல் சோதனைப் பயணம் பூமியின் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழையும் போது விண்க லத்தின் வேகத்தைக் குறைத்து, விண் வெளி வீரர்களை அதிக தாக்கத்தி லிருந்து பாதுகாப்பதே இந்தப் பாராசூட் அமைப்பின் முதன்மை நோக்கமாகும். பாராசூட் வரிசையாக வெளிப்படும் செயல்முறையின் முழு செயல்பாட்டை யும் சோதிப்பதே இதன் முக்கிய குறிக் கோளாக இருந்தது. இந்திய விமானப் படை, டிஆர்டிஓ, இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக நடத்தப்பட்ட  “ஒருங்கி ணைந்த வான்வழி டிராப் சோதனை (IADT-01)”, ககன்யான் திட்டத்தின் ஒட்டு மொத்த பாதுகாப்பு வடிவமைப்பில் நம்பிக்கையை கணிசமாக அதிகரிக் கிறது. அதே போல ஆளில்லா முதல் சோத னைப் பயணம் டிசம்பர் 2025இல் திட்ட மிடப்பட்டுள்ளது. 3 பேர் கொண்ட குழுவை 400 கி.மீ. குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு எடுத்துச் செல்லும் முதல் மனித விண்வெளிப் பயணம் 2028இல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.