tamilnadu

img

காசாவில் போர் நிறுத்தம் அமல்

காசாவில் போர் நிறுத்தம் அமல்  அமைதி ஒப்பந்தத்தை  இஸ்ரேல் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்!

காசா, அக்.11- காசாவில் போர் நிறுத்த ஒப்பந் தம் அமலுக்கு வந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.  காசா மீதான இனப்படுகொலை போரை நிறுத்த வேண்டும் என்று இஸ்ரேலுக்கு எதிராக உலக நாடு கள் அணி திரண்டன. ஐக்கிய நாடு கள் அவை மூலம் அழுத்தம் கொடுத்து வந்தன. உலகம் முழு வதும் பல லட்சக்கணக்கில் திரண்டு  மக்கள் போராட்டங்களை நடத்தி னர்.  இதனிடையே, அமெரிக்க ஜனா திபதி டிரம்ப், போர் நிறுத்தத்திற்  கான 20 அம்ச முன்மொழிவை வெளி யிட்டார். இதுதொடர்பாக எகிப்தில் நடத்த பேச்சுவார்த்தையில் டிரம்ப்பின் முன்மொழிவு, இஸ்ரேல்  அரசு மற்றும் ஹமாஸ் ஆகிய இரு தரப்பிலும் ஏற்றுக் கொள்ளப் பட்டது. அதைத் தொடர்ந்து தற்காலி கமாக போரை நிறுத்துவது, பண யக் கைதிகளை விடுவிப்பது, இஸ்ரேல் தனது ராணுவத்தை குறிப்பிட்ட எல்லைக்கு வெளியே நிறுத்துவது என முதற்கட்ட திட்டத் திற்கு ஒப்புக்கொண்டு அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. முன்  னதாக போர் நிறுத்த உடன்படிக்கை யை, இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தமது அமைச்சரவையில் சமர்ப்பித்து ஒப்புதல் பெற்றார்.  இதையடுத்து, காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக அறி விக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத் தின்படி, இஸ்ரேல் ராணுவம் வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது. எனினும் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் காசா வை சுற்றி வளைத்தோ காசாவை மையப்படுத்தி அல்லது அதன் மற்றொரு எல்லை முனை வரை   சென்றோ தாக்கும் வகையில் தான் ராணுவம் நிலை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே யான தற்காலிக போர் நிறுத்தம்  ஏற்பட்டுள்ள நிலையில், இஸ்  ரேல் தரப்பில் ஒப்பந்த மீறல்கள்  நிகழாமல் இருப்பதை அமெ ரிக்கா உறுதி செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்  தலைமைக்குழு வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு: இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான போர் நிறுத்தம் மற்  றும் பணயகைதிகள், சிறைக்  கைதிகள் பரிமாற்றத்திற்கான ‘அமைதி ஒப்பந் தத்தின்’ முதல் கட்டம் அமல்படுத்  தப்பட்டிருப்பதை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்  தலைமைக் குழு வரவேற்கிறது. ஏற்கெனவே ஏற்பட்ட ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை, இஸ்  ரேல் மீறியதை நாம் பார்த்திருக்கி றோம். எனவே இத்தகைய ஒப்  பந்த மீறல்கள் மீண்டும் நிகழ்வ தற்கு அனுமதிக்கக் கூடாது. இந்த  ஒப்பந்தம் ஏற்படுவதற்கு உதவி யதாகக் கூறும் அமெரிக்கா, இந்  தப் போர் நிறுத்தத்தை, இஸ்ரேல்  கடைப்பிடிப்பதை உறுதி செய்யும்  பொறுப்பையும் ஏற்க வேண்டும்.  இஸ்ரேல் மீண்டும் தாக்கு தலைத் தொடங்காமல் தடுக்க  சர்வதேச சமூகம் தொடர்ந்து இஸ்  ரேல் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும். பாலஸ்தீனம் தொட ர்பான ஐ.நா அவையின் அனைத்துத் தீர்மானங்களுக்கும் இஸ்ரேல் கட்டுப்பட்டு நடப்பதை யும் பாலஸ்தீனப் பகுதிகளின்  மீதான அதன் ஆக்கிரமிப்பு நட வடிக்கைகளை முடிவுக்குக்  கொண்டு வரவும் இஸ்ரேல் கட்டா யப்படுத்தப் பட வேண்டும்.  1967-ஆம் ஆண்டுக்கு முந்தைய எல்லைகளின் அடிப்ப டையில், கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட ஒரு சுதந்திரமான பாலஸ்தீன நாடு அமைக்கப்படுவதன் மூலமே அப்பகுதியில் ஒரு நீதியையும் நிரந்தரமான அமைதியையும் அடைய முடியும் என்று மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதி யாக நம்புகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.