பாலஸ்தீனர்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேல் ஐ.நா. போர் நிறுத்த தீர்மானத்தை மீண்டும் தடுத்தது அமெரிக்கா!
நியூயார்க், செப். 19 - ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட காசா போர் நிறுத்தத் தீர்மானத்தை, அமெரிக்கா 6-ஆவது முறையாக தனது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்தியுள்ளது. இஸ்ரேல் நடத்தி வரும் போர் கார ணமாக காசாவில் பஞ்சம் நிலவுவதாக ஐ.நா. அதிகாரப்பூர்வமாக அறி வித்துள்ளது. மேலும், இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக வும் ஐ.நா.வின் சர்வதேச விசார ணைக் குழு சில நாட்களுக்கு முன்பு குற்றம்சாட்டியிருந்தது. இந்தச் சூழ லில் காசாவில் உடனடியாக நிரந்தரப் போர்நிறுத்தத்தை அமல்படுத்தக் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அமெரிக்கா தனது ரத்து அதிகாரத்தைப் பயன் படுத்தி வழக்கம்போல இந்தத் தீர்மா னத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளது. பாதுகாப்புக் கவுன்சிலில் உறுப்பினராக இருக்கும் 15 நாடுகளில் அமெரிக்காவைத் தவிர மற்ற 14 நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.