tamilnadu

img

நல்லாற்றில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியாயா?

நல்லாற்றில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியாயா?

அவிநாசி, அக்.16- திருமுருகன்பூண்டி நகராட்சிக் குட்பட்ட பகுதியில் உள்ள நல் லாற்றை தூய்மைப்படுத்தக் கோரி யும், நல்லாற்றுப் பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்புத் தொட்டி அமைப் பதை கண்டித்தும்,  உரிய அனுமதி கடிதத்தை நகராட்சி நிர்வாகம் காண்பிக்கக் கோரி, நகராட்சி அலு வலகத்தை மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருமுருகன்பூண்டி நகராட்சிக் குட்பட்ட நல்லாற்றை தூய்மைப்ப டுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இதன் தொடர்ச் சியாக, பொதுப்பணித்துறை நல் லாற்றை தூய்மைப்படுத்த உரிய நிதி தேவை என தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இந்த சூழலில், உயர் நீதிமன்றம் நீரோ டைகளில் எந்தவிதமான கட்டிடங் களும் எழுப்பக் கூடாது என உத்தர விட்டிருந்தும், நல்லாற்றுப் பகுதி யில் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொட்டி  அமைக்கும் பணி நடைபெற்று வரு கிறது. இந்த பணிக்கு உரிய அனு மதி பெறவில்லை என்று குற்றம்  சாட்டி, மார்க்சிஸ்ட் கட்சியினர் கடந்த பத்து  நாட்களுக்கு முன்பு  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனைத் தொடர்ந்து, கட்சியி னர் நகராட்சி நிர்வாகத்திடம் அனு மதி கடிதத்தை காண்பிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தியும், நக ராட்சி நிர்வாகம் கடிதத்தை காண் பிக்க மறுக்கிறது. இதன்தொடர்ச்சியாக, வியாழ னன்று,  மார்க்சிஸ்ட் கட்சியின் அவி நாசி ஒன்றியச் செயலாளர் ஈஸ்வர மூர்த்தி தலைமையில், நல்லாற்றுப் பகுதியில் கட்டப்படும் சுத்திகரிப்பு நீர்த்தேக்க தொட்டிக்கு அனுமதி கடிதத்தை காண்பிக்க வேண்டும் என்றும், மேலும் இந்தப் பணி கார ணமாக ராக்கியாபாளையம் பகு திக்கு வரும் மழை நீர் குளத்திற்கு  செல்லாமல் பாதிப்பு ஏற்படும் என் றும் கோரிக்கைகளை உள்ளடக் கிய மனுவை ஆணையரிடம் கொடுக்கச் சென்றனர். அலுவல கத்தில் ஆணையர் இல்லாத தால், காவல்துறையினர் ஆய்வா ளர் மற்றும் துணை ஆனையர் ஆகி யோர் மனுவை இன்ஜினியரிடம் அளிக்குமாறு தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்த மார்க்சிஸ்ட் கட்சியினர், நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து முழக் கங்களை எழுப்பினர். இதையடுத்து, காவல்துறையி னர் நகராட்சி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆணையர் அவசர கூட்டம் காரணமாக மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் சென்றிருப்ப தாகவும், இன்ஜினியரிடம் மனுவை  அளிக்குமாறு தெரிவித்தனர். ஆனால், அனுமதி கடிதத்தை காண்பிக்கும் வரை போராட்டத் தைக்கைவிட மாட்டோம் என தலை வர்கள் உறுதியாக தெரிவித்தனர். இதற்கு நகராட்சி இன்ஜினியர், அனுமதி கடிதம் ஆணையரிடம் இருப்பதாகவும், அவர் வந்தால் மட் டுமே காண்பிக்க முடியும் என்றும் தெரிவித்தார். அனுமதி கடிதத்தை காண்பிக்கும் வரை நல்லாற்றுப் பகுதியில் கட்டிடம் கட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும் கட்சி யினர் வலியுறுத்தினர். இதனையடுத்து, திருமுருகன் பூண்டி காவல்துறையினர் நக ராட்சி நிர்வாகத்துடன் நடத்திய  பேச்சுவார்த்தையில், வெள்ளி யன்று காலை 10 மணிக்கு அனுமதி கடிதத்தை காண்பிக்கிறோம் என  நகராட்சி நிர்வாகம் உறுதியளித் தது. காவல்துறையினர் இந்த தக வலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியினர் மற்றும் பொதுமக்களி டம் தெரிவித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட கட்சியினர், போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்ற னர். இருப்பினும், உறுதியளித்த படி அனுமதி கடிதம் காண்பிக்கப் படவில்லை என்றால் மேலும் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் எச்சரித்தனர். இந்த போராட்டத்தில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நந்தகோபால், ஒன்றியச் செயலா ளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்டக்  குழு உறுப்பினர் பழனிசாமி, ஒன் றியக்குழு உறுப்பினர்கள் வெங்க டாசலம், பாலசுப்பிரமணியம், ராஜ், தேவி, கருப்புசாமி, தினகரன், நகர் மன்ற உறுப்பினர் சுப்பிரமணியம், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் கௌரி மணி, தமுஎகச பூண்டி கிளைத் தலைவர் ஈஸ்வரன், செய லாளர் காமராஜ், வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் சந்தோஷ் குமார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.