தமிழகத்தில் பள்ளி மாணவர் இடைநிற்றல் விகிதம் அதிகரிப்பு?
புள்ளி விவரங்களில் வெளியான தகவல் சென்னை, அக். 24 - தமிழ்நாட்டில் 57,935 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 37,626 அரசு பள்ளிகள், 8,254 அரசு உதவி பெறும் பள்ளிகள், 11,890 தனி யார் பள்ளிகள், 165 இதர பள்ளிகள் என மொத்தம் ஒரு கோடியே 25 லட்சத்து 18 ஆயிரத்து 167 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளிக் குழந்தை களின் இடைநிற்றல் விகிதம் அதி கரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இந்திய அளவில் தொடக்கப் பள்ளிகளில் (1 முதல் 5ஆம் வகுப்பு வரை) 0.3 சதவிகிதம், நடு நிலைப் பள்ளிகளில் (6 முதல் 8ஆம் வகுப்பு வரை) 3.5 சதவிகிதம், உயர் நிலைப் பள்ளிகளில் (9, 10ஆம் வகுப்புகள்) 11.5 சதவிகிதம் என்ற அளவில் இடை நிற்றல் விகிதம் இருந்து வருகிறது. இது கடந்த 2024-25ஆம் ஆண்டுக் கான- ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழ் வரக்கூடிய ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பின் (யு.டி.ஐ.எஸ்.இ.) புள்ளிவிவரங்கள் ஆகும். இதே அமைப்பானது, தமிழ்நாட் டில் இடைநிற்றல் விகிதம் தொடக்கப் பள்ளிகளில் 2.7 சதவகிதம், நடுநிலைப் பள்ளியில் 2.8 சதவிகிதம், உயர்நி லைப்பள்ளிகளில் 8.5 சதவிகிதம் என்ற அளவில் உள்ளதாகவும், மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது இடைநிற்றல் விகிதத்தில் தமிழ்நாடு ஓரளவுக்கு நல்ல நிலையிலேயே, இருந்தாலும், முந்தைய ஆண்டுடன் (2023-24) பார்க்கையில், கடந்த ஆண்டு இடைநிற்றல் விகிதம் அதி கரித்துள்ளது என்று சுட்டிக்காட்டி யுள்ளது. கடந்த 2023-24ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களில் தமிழ்நாடு தொடக்க மற்றும் நடு நிலைப்பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் ‘பூஜ்ஜியம்’ என்ற நிலை யிலும், உயர்நிலைப்பள்ளிகளில் 7.7 சதவிகிதமாகவும் இருந்தது. இதனை அடிப்படையாக கொண்டு இடை நிற்றலே இல்லை என பள்ளிக்கல்வித் துறை சொல்லி வந்தது. ஆனால் 2024 -25ஆம் ஆண்டு புள்ளி விவரத்தில் இடைநிற்றல் விகிதம் அதிகரித்து இருக்கிறது. இடைநிற்றல் விகிதத்தை பொறுத்தவரையில், ஒரு ஆண்டு குறைவதும், அதற்கு அடுத்த ஆண்டு இடைநிற்றல் விகிதம் அதிகரிப்பதும் தமிழ்நாட்டில் தொடருகிறது. அந்த வரிசையில் 2023-24ஆம் ஆண்டு குறைந்து, 2024-25ஆம் ஆண்டு அதிகரித்துள்ளது. இந்த புள்ளி விவரங்களை கொண்டு நடப்பாண்டில், இடை நிற்றல் விகிதத்தை குறைக்கும் முயற்சியில் தமிழக அரசு தீவிர நடவடிக்கையை கையில் எடுத்து இருக்கிறது.
