tamilnadu

இஸ்ரேல் மொழியில் ஈரான் பதிலடி

இஸ்ரேல் மொழியில் ஈரான் பதிலடி

டெஹ்ரான்,ஜூன்21- ஈரான்-இஸ்ரேலுக்கு இடையிலான மோதல் ஒரு வாரத்தை கடந்துள்ள நிலையில் ஈரான் ராணுவம் இஸ்ரேல் எதிர்பார்க்காத வகையில் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது.  இந்நிலையில் ஜூன் 20 அன்று கொத்துக்குண்டுகளை பயன்படுத்தி ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இக்குண்டுகள் சுமார் 8 கி.மீ வரை இஸ்ரேலுக்குள் விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரேலை போலவே ஈரானும் சர்வதேச விதிமுறைகளை மீறியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.  இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் உலகவில் தடை செய்யப்பட்ட கொத்துக்குண்டுகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் ஒவ்வொரு நாளும் காசாவில் உள்ள பாலஸ்தீனர்கள் மீது வீசி இனப்படுகொலை செய்துள்ளது. இந்நிலையில் ஈரானும் இஸ்ரேலுக்கு அவர்களது மொழி யிலேயே பதிலடி கொடுத்துள்ளது எனவும் இணையத்தில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.