tamilnadu

கார்ப்பரேட்களுக்கு வெண்ணெய்: உழைக்கும் மக்களுக்கு சுண்ணாம்பு

சென்னை,பிப்.1- ஒன்றிய அரசின் நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன் 2022 - 2023ஆம் ஆண்டிற் கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்து ள்ளார். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கூறி யிருப்பதாவது:- நாட்டு மக்கள் தொகையில் மேல்தட்டில் உள்ள பத்து விழுக் காட்டினர் நாட்டின் மொத்த  வருமானத்தில் 57 விழுக்காட்டி னர் பெற்று வரும் நிலையில் அடித் தட்டில் உள்ள 50 விழுக்காட்டினர் (அதாவது 65 கோடி மக்கள்) 8  விழுக்காடு மட்டுமே பெறுவதை அண்மையில் சர்வதேச ஆய்வ றிக்கை வெளிப்படுத்தியது. சமூக கொந்தளிப்பை உரு வாக்கும் இந்த ஏற்றத் தாழ்வை  சமப்படுத்துவதற்கான முயற்சியில்  நிதிநிலை அறிக்கை ஈடுபட வில்லை. 142 பில்லியனர்களிடம் குவிந்து வரும் செல்வக்குவிப்பை மேலும் பெருக்குவதில் நிதிநிலை அறிக்கை அக்கறைகாட்டுகிறது.

அடித்தட்டு உழைக்கும் மக்களை வஞ்சித்து விட்டது. கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் பாஜக ஒன்றிய அரசு செய்த குளறு படியால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளன. இவைகளை மீட்க கடனுதவி அறிவிப்பு மட்டும் பயன் தராது. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந் தபட்ச ஆதரவு விலை நிர்ணயிப் பதை சட்டப்பூர்வமாக உறுதி செய்ய  வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப் படவில்லை. ஸ்டார்ட் அப் - தொழில்கள் முடங்கிக்  கிடக்கின் றன. அவைகளுக்கு மேலும் ஐந்தா ண்டுகள் ஊக்குவிப்பு உதவி தேவை எனக் கோருவதை நிதி நிலை அறிக்கை கவனத்தில் கொள்ளவில்லை. இயற்கை பேரிடர் காலங்க ளில் மாநில அரசுகளுக்கு ஆதரவு  கரம் நீட்டுவதில் பாகுபாடு காட்டிவரும் ஒன்றிய அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று அறி வித்திருப்பது நம்பிக்கை அளிப்பதாக இல்லை. பெரும் நிறுவனங்களின் கூடுதல் வரி ஐந்து விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. சமூக உற்பத்தியில் உருவாகும் சொத்து க்களை குவித்து வரும் கார்ப்ப ரேட் நிறுவனங்களின் கண்க ளுக்கு வெண்ணெய் தடவும் நிதிநிலை அறிக்கை, வேலை யில்லாமலும் வருமானம் இழந்தும்  கதறி அழுதுவரும் ஏழை மக்களின் கண்களில் சுண்ணாம்பு வைத்து தேய்த்துள்ளது என்று முத்தரசன் தெரிவித்திருக்கிறார்.