ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாடு முதல்வர் முன்னிலையில் ரூ. 24,307 கோடிக்குபுரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!
ஓசூர், செப். 11 - தமிழக அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் ஓசூரில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் வியாழக் கிழமை (செப்.11) அன்று முதலீட்டா ளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், 23,303.15 கோடி ரூபாய் முதலீட்டில் 44,870 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 53 புரிந்து ணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டதாக அரசு செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டு உள்ளது. மேலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் 1003.85 கோடி ரூபாய் முத லீட்டில் 4,483 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 39 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற் கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள் ளது. ஆக மொத்தம், ரூ. 24,307 கோடி முதலீட்டில் 49,353 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிடும் வகையில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கை யெழுத்தாகியுள்ளன. 250 கோடி ரூபாய் முதலீட்டில் 1,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையிலான 3 முடிவுற்ற திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். 1210 கோடி ரூபாய் முதலீட்டில் 7900 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 4 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். 4 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் வழங்கினார். அடிக்கல் நாட்டு ஓசூர் எல்காட்டில், அசென்ட் சர்க்யூட்ஸ் நிறுவனத்தின் 2 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அசென்ட் சர்க்யூட்ஸ் நிறுவனம் ரூ. 1,100 கோடி முதலீட்டில் புதிதாக 2 திட்டங்களை தொடங்குகிறது. இந்த புதிய திட்டங்களால் 1200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், தொழில்துறையில் தமிழ்நாடு வேகமாக செயல்பட்டு வருவதாகக் கூறினார். “ஆட்சிக்கு வந்த உடன் 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை இலக்காக வைத்தோம். தொழில் துறைக்கான கட்டமைப்புகளை மேம்படுத்த தொழில் செய்யும் சூழலை உருவாக்கி உள்ளோம். திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வருகின்றனர்” என்று தெரிவித்தார். அமைச்சர் பெருமிதம் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேசுகை யில், “தமிழ்நாடு வரலாறு காணாத வகையில், அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி வளர்ச்சி அடைந்து வருகிறது. சென்னை - அதன் சுற்றுப்புற பகுதிகள், கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் வளர்ச்சி இல்லாத நிலை மாறி வருகிறது” என்று தெரிவித்தார். “பெரிய தொழிற் சாலைகள் இங்கு வரும் பொழுது சிறு குறு தொழிற்சாலைகள் வளரும். பல்வேறு தொழில்கள், கார் உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ் கார், கெமிக்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இன்று முதலீடு செய்யப்படுகிறது” என்றும் தெரிவித்தார்.