tamilnadu

img

ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாடு

ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை திரும்பிய முதல்வர் அறிவிப்பு

 

சென்னை, செப்.8 - தூத்துக்குடியைப் போல ஓசூரிலும்  முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும்  என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜெர்மனி மற்றும் இங்கி லாந்து நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு திங்களன்று சென்னை திரும்பினார். தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்து உள்ளது குறித்து விமான நிலையத் தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். வெற்றிகரமான பயணம் ஒரு வாரகாலமாக ஜெர்மனி, இங்கி லாந்து பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு மன நிறைவோடு திரும்பியதாகத் முதலமைச்சர் தெரி வித்தார். இந்த பயணத்தைப் பொருத்த வரை மாபெரும் வெற்றிப் பயணமாக அமைந்திருக்கிறது. இந்த பயத்தில் மொத்தம் 15,516 கோடி ரூபாய் மதிப்பி லான முதலீடுகள் மூலமாக, 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய வகையில், 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். தமிழ்நாடு மீது நம்பிக்கை வைத்து,  10 புதிய நிறுவனங்கள் தொழில்  தொடங்குவதற்கு முன்வந்திருக் கின்றன. உயர்கல்வி, சிறுதொழில் போன்ற துறைகளில் ஆறு அமைப்பு கள் தமிழ்நாட்டுடன் இணைந்து கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள இருப்ப தாகவும், ஏற்கனவே இருக்கும் 17 நிறு வனங்களும் மற்ற மாநிலங்களை நோக்கிச் செல்லாமல், தமிழ்நாட்டி லேயே தங்களுடைய தொழிலை மேலும் விரிவுபடுத்த முடிவு செய்திருப்ப தாகவும் தெரிவித்தார். ஆக்ஸ்போர்டில் பெரியாரின் உருவம்  ஆயிரம் ஆண்டு பழமையான, உலகின் முதன்மையான ஆக்ஸ் போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப் படத்தை திறந்து வைத்ததுதான் அந்த பெருமைக்குக் காரணம் என்று தெரிவித்தார்.  லண்டனில் இருக்கும் பொது வுடைமைத் தத்துவ மாமேதை கார்ல் மார்க்ஸ் நினைவிடம், சட்ட மாமேதை புரட்சியாளர் அம்பேத்கர் வாழ்ந்த இல்லம், திருவள்ளுவர் சிலை, தமிழ்க் காதலர் ஜி.யு.போப் நினைவிடம் போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று  பல பெருமைகளுடன் வந்திருப்பதாக கூறினார். சந்திப்பின் முக்கியத்துவம் ஏற்கனவே தமிழ்நாட்டில் நிறுவ னங்கள் இருந்தாலும், அவர்கள் புதிய திட்டங்களை இங்கேதான் தொடங்க  வேண்டும், விரிவுபடுத்த வேண்டும்  என்று அவசியம் இல்லை. அவர்களு டைய புதிய முதலீடுகளையும் தமிழ் நாட்டிலேயே மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டிய நிறுவன உயரதிகாரி களை சந்தித்து பேசும்போதுதான், அதை அவர்கள் உறுதி செய்தார்கள். அதற்காக இது போன்ற பயணங்கள் தேவைப்படுகிறது என்று முதல மைச்சர் விளக்கினார். இப்போது கையெழுத்தான ஒப்பந் தங்கள் மட்டுமல்ல, இன்னும் பல முதலீடுகளும், பல நிறுவனங்களும் இந்தச் சந்திப்பினால் நிச்சயம் தமிழ் நாட்டிற்கு வரும் என்ற நம்பிக்கையை யும் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார். செப்.11 ஆம் தேதி ஓசூருக்குச் சென்று, 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, டெல்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சா லையில் ஆட்டோமேட்டட் லேன் அமைப் பையும், பணியாளர் தங்குமிடத்தை யும் திறந்து வைத்து, 1100 கோடி  ரூபாய் மதிப்பிலான புதிய தொழிற் சாலைகளுக்கும் அடிக்கல் நாட்ட இருக்கிறேன் என்றார் முதலமைச்சர். ஏற்கனவே தூத்துக்குடியில் நடத் தியது போன்று, ஓசூரிலும் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தப் போவதாகவும், அங்கும் பல ஆயிரம் கோடி ரூபாய்  முதலீடு வர இருப்பதாகவும் அறி வித்தார். தொழில் முதலீடுகளை ஈர்ப்ப தற்கான தங்களுடைய வெளிநாட்டு பயணங்களும், இங்கே மேற்கொள் ளும் பயணங்களும் எப்போதும் நிற்காது,  இது தொடரும் என்று உறுதியளித்தார். எதிர்க்கட்சி விமர்சனத்திற்கு பதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சரின் வெளி நாட்டு பயணம் என்பது அவரது முதலீட் டிற்காக நடத்தப்பட்டது என்ற விமர்ச னத்தை முன்வைத்திருப்பது குறித்து  கேட்கப்பட்ட கேள்விக்கு, ஒரு வகை யில் அவர் முதலீடு செய்யப் போனதைப் பற்றி திரித்து சொல்லியிருக்கிறார் என்றார். “நான் சொல்ல விரும்புவது, சுயமரியாதை கொள்கையில் முதலீடு செய்துவிட்டு வந்திருக்கிறேன். தந்தை  பெரியாரின் உணர்வுகளை, பெரியா ரைப் பற்றி அந்த நாட்டில் முதலீடு செய்துவிட்டு வந்திருக்கிறேன். அது தான் உண்மை” என்றார். உற்சாக வரவேற்பு முன்னதாக, சென்னை திரும்பிய  முதலமைச்சருக்கு விமான நிலையத் தில் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.