tamilnadu

img

பாத்திரங்களை சுத்தம் செய்யும் இயந்திரம் அறிமுகம்

சென்னை, மார்ச் 23- நீர், மின்சாரம், சோப்பு சேமிப்பு அம்சங்களு டன் புதிய டிஷ் வாஷ் (பாத்திரங்களை சுத்தம்  செய்யும் இயந்திரம், அறிமுகம் செய்யப்பட்டுள் ளது. அதன் துவக்க விழா சென்னை ஆவடி  அருகே மோரை கிராமத்திலுள்ள அயூட்டா தொழிற்பேட்டையில் நடைபெற்றது. மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், முன்  னாள் ஐஏஎஸ் அதிகாரி நாகல்சாமி, இந்தியன்  வங்கி அம்பத்தூர் மேலாளர் வெங்கடேஸ்வரா குப்தா, தொழிற்பேட்டை அசோசியேஷன் தலை வர் கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்று இயந்தி ரத்தை அறிமுகப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் தொழிற்பேட்டை அசோசி யேஷன் செயலாளர் சி.மது, துணைத் தலைவர்  செல்லபாபு, சிபிஎம் வட சென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் ம.பூபாலன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஏ.ஜான், சி.சுந்தரராஜ், ஆர். கோபி, சு.லெனின் சுந்தர், பி.என்.உண்ணி, சு. பால்சாமி, இ.பாக்கியம், பி.ஜி.கே.ரமேஷ், என். கணேசன் (சிஐடியு), கே.ரோகிணி, ஸ்ரீராம், கே. நிஷா, எஸ்.சக்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். புதிய இயந்திரம் குறித்து நிஷோ கண்ட் ரோல் சிஸ்டம் நிறுவனத்தின் இயக்குநர் கே. கிருஷ்ணசாமி கூறியதாவது: கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிற்  சாலைகள் மின்மயமாக்கல், கன்ட்ரோல் பேனல்  கள், ஸ்விட்ச் போர்டுகள் டிசைனிங் செய்து தயா ரித்தல், எலக்ட்ரிகல் கேபிள் தயாரித்தல் நிறுவன மாக திகழ்ந்து ஐஎஸ்ஓ 9000 சான்றிதழ் பெற்றுள்  ளது எங்கள் நிறுவனம்.

குடும்பங்களில் வேலைப்பளுவை குறைக்க நவீன அம்சங்களுடன் பாத்திரங்கள் சுத்தம் செய்  யும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 75 விழுக்  காடு நீர் சேமிப்பு, மின்சாரம் சேமிப்பு, பாத்திரம் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் சோப்பு 90 விழுக்காடு சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு சர்வ தேச தரத்திலான அம்சங்களுடன் உருவாக்கப் பட்டுள்ள டிஷ் ‘ஓ’ வாஷ் கருவி, வீட்டில் சமை யல் அறையிலுள்ள சிங்க் (தொட்டியின்) மேல்  எளிதில் பொருத்தலாம். அதோடு நடமாடும் கருவியாகவும் வேறு இடங்களுக்கு கொண்டு சென்றும் இந்தக் கருவியை பயன்படுத்த முடி யும். இன்றைய வாழ்வியல் சூழலுக்கு தண்ணீர் மிக மிக அத்தியாவசியமானது. தண்ணீரை எந்  தெந்த வழிகளில் எல்லாம் சேமிக்க முடியும் என  பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அப்படி யோசித்தபோது எனக்கு தோன்றியது தான் வீடுகளில், மற்ற பொது நிகழ்ச்சிகளின் போது நாம் பயன்படுத்தும் சமையல் பாத்தி ரங்கள், சாப்பாட்டு தட்டுகள் ஆகியவற்றை சுத்  தம் செய்யும் போது நாம் பயன்படுத்தும் தண்ணீர்  அதிகப்படியாக செலவாகும். இதை குறைப்ப தற்கும், எளிதான முறையில் பாத்திரங்களை  சுத்தப்படுத்துவதற்கு கண்டுபிடிக்கப்பட்டது தான் டிஷ் ‘ஓ’ வாஷ் இயந்திரம். 

இந்த இயந்திரத்தை தொடாமலே இயக்க லாம். இதற்கு 5 எம்.எம். அளவுள்ள குழாயின் மூலம் தான் தண்ணீர் செல்கிறது. வழக்கமாக நாம் வீட்டில் பயன்படுத்தும் குழாயின் மூலம் அதிகப்படியான தண்ணீரை கணக்கு வழக்கு இல்லாமல் செலவிட்டு வருகிறோம். ஒரு சூட் கேஸ் அளவே உள்ள இந்த இயந்திரத்தை வீட்  டின் சமையல் அறையிலுள்ள சிங்க் மேல் பகுதி யில் பொருத்திக் கொள்ளலாம் அல்லது தனி யாகவும் நமக்கு தேவையான வகையில் அமைத்  துக் கொள்ளலாம். இன்வெர்டர் மூலமாகவும் இயக்கலாம். இதில் குக்கர் முதற்கொண்டு அனைத்து வகையான பாத்திரங்கள், தட்டுகள், டம்ளர்கள்,  பிளாஸ்குகள் என தொட்டியில் சுத்தம் செய்யும்  அனைத்து பொருட்களையும் எளிதில் சுத்தம்  செய்து கொள்ள முடியும். சர்வதேச தரத்துடன்,  நவீன அம்சங்களுடன் இந்த இயந்திரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வீடுகள் மட்டுமல்லாமல் ஓட்டல்கள், கேண் டீன், காபி, டீ கடைகளில் பயன்படுத்தலாம். 10 விழுக்காடு திரவ சோப் மட்டுமே போது மானது, மாதத்திற்கு 3 யூனிட் மட்டுமே மின்சாரம்  தேவை என பல அம்சங்களை இந்த டிஷ் வாஷ்  இயந்திரம் கொண்டுள்ளது. இதன் விலை வெறும் 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே. இந்த புதிய கண்டுபிடிப்பில் என்.ரங்கா  என்பவரும் என்னுடன் இணைந்து பணியாற்றி னார். டிஷ் ‘ஓ’ வாஷ் கருவி முற்றிலும் இந்தியா வில் உருவாக்கப்பட்டது. இதன் அறிமுகம் குடும்  பங்களில் சமையல், பாத்திரம் கழுவுதல் என  உழன்று கிடக்கும் கோடானு கோடி பெண் களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்ப தில் சந்தேகம் இல்லை. இயந்திரம் தேவைப்படு வோர் nisho.krishnasamy@gmail.com என்ற  இ.மெயில் முகவரியிலும், 94442 08319 என்ற  தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ள லாம்.  இவ்வாறு கே.கிருஷ்ணசாமி கூறினார்.

;