tamilnadu

பசுமை ஹைட்ரஜன் மூலம் மின்சாரம் என்எல்சி தலைவர் பிரசன்னகுமார் பேட்டி

பசுமை ஹைட்ரஜன் மூலம் மின்சாரம்  என்எல்சி தலைவர் பிரசன்னகுமார் பேட்டி

கடலூர், செப்.18- பசுமை ஹைட்ரஜன் மூலம் மின்சாரம் தயாரிக்க என்எல்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தலைவர்  பிரசன்ன குமார் மேட்டுப்பள்ளி தெரிவித்தார். கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிஎஸ்ஆர் நிதி 70 விழுக்காடு கடலூர் மாவட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது”என்றார். என்எல்சி நிறுவனம் இந்த ஆண்டு ரூ.380 கோடிக்கு சிஎஸ்ஆர் நிதியை பயன்படுத்தியுள்ளது. நிலக்கரி மட்டுமல்லாமல் என்எல்சி நிறுவனம் சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலைகள் மூலம் மின்சக்திகளை தயாரித்து வருகிறது. புதுப்பிக்கபட்ட எரிசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பில் என்எல்சி நிறுவனம் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “1.4 ஜி.கா.வாட் மின்சார உற்பத்தி நடைபெற்று வரும் நிலையில், 10 ஜிகா வாட்டாக அதை உயர்த்த என்எல்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பசுமை ஹைட்ரஜன் மூலம் என்எல்சி நிறுவனம் மின்சார தயாரிப்பில் ஈடுபட உள்ளது என்றார். அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு என்எல்சி நிறுவனம் நிலங்களை (R&R Policy) கையகப்படுத்தி வருகிறது. 3 வது சுரங்க திட்டத்திற்கு கோப்புகள் அரசிடம் உள்ளது. இதுவரையில் இது குறித்து எந்த தகவலும் இல்லை  என்றும் அவர் கூறினார்.