சென்னை, ஜூன் 9- ஆசிய ஹாக்கி போட்டியை நடத்த சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களை ஆய்வு செய்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை செம்மஞ்சேரியிலுள்ள தனியார் கல்லூரியில் மாற்றுத்திற னாளிகளுக்காக நடைபெறும் போட்டிகளை தமிழ்நாடு விளை யாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “செஸ் ஒலிம்பி யாட் போட்டி சிறப்பாக நடத்தி யது போல் ஆசிய ஹாக்கி போட்டி யையும் நடத்த உள்ளோம். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது” என்றார். கேலோ இந்தியாவின் அனைத்து நிகழ்ச்சிகளின் துவக்க விழா மற்றும் நிறைவு விழாக்களில் பிரதமர் கலந்து கொண்டுள்ளார். எனவே ஆசிய ஹாக்கி போட்டிகளுக்கும் அவரை கண்டிப்பாக அழைப்போம். சென்னை, கோவை, மதுரை உள் ளிட்ட நகரங்களின் வசதிகளை பார் வையிட்டு முதற்கட்ட கூட்டத்தில் பேசி யுள்ளோம் என்றும் அவர் கூறினார்.