சென்னை,செப்,10- குடிநீர் திட்டப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சி யர்களை தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடி தத்தில் கூறியிருப்பதாவது:- கடந்த ஆண்டு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 60 விழுக்காடு வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு குழாய்களை அமைத்து, இந்திய மாநிலங்க ளில் தமிழ்நாடு சிறப்பாகச் செயல்பட்டது என ஒன்றிய அரசுஅங்கீகரித்துள்ளது. இத்தகையவகையில் சிறந்து விளங்கிய நம் மாநிலத்தில், மாசுபாடான நீரை அருந்தியதால் பலர் உடல்நிலை பாதிப்புக் குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு ஒருவர் உயிரிழந்தார். இதுபோன்ற செய்திகள் வருவது வருந்தத்தக்கது. எனவே, இத்தகைய சம்பவங்கள் நடை பெறாத வண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக, குடிநீர் விநியோகம் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கை களை தீவிரப்படுத்த வேண்டும். குடிநீர் பிரச்சனை தொடர்பாக புகார் அளித்தால் அவை சரியான நேரத்தில் தீர்க்கப்படுகிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த நடவடிக் கைகள் அனைத்தையும் வருகிற 30ஆம் தேதிக்கு முன் நிறைவேற்றி முடிக்க வேண்டும். மேலும், இதுதொடர்பான முன்னேற்றத்தையும் ஆக்கப்பூர்வமான விளைவுகளையும் கண்காணிக்க ஏதுவாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளருக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மைச் செயலாளருக்கும் விரிவான அறிக்கையை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.