அனைத்து கல்லூரிகளிலும் நிறுவன மேலாண்மைக் குழு
அமைச்சர் தகவல்
சென்னை, செப். 25 - சென்னை பாரதி மகளிர் கல்லூ ரியில், நிறுவன மேலாண்மைக்குழு திட்டத்தை, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தொடங்கி வைத்தார். மாணவர்கள் புத்தக அறிவுடன் மட்டுமல்லாமல் தொழில்நுட்ப அறிவு, சமூக உணர்வு, பண்பாடு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றைக் கற்றறிய ஏதுவாக நிறுவன மேலா ண்மைக்குழு திட்டத்தை தமிழக அரசு வடிவமைத்தது. கல்லூரிகளைச் சுற்றியுள்ள தொழில்துறை சார்ந்தவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களை உள்ளடக்கிய நிறு வன மேலாண் மைக் குழு ஒவ் வொரு கல்லூரி யிலும் அமைக்கப் படும் என முதல் வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். அதன்படி தற்போது, 125 கல்லூரிகளில் இந்தக் குழு தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுக் கழக பயிற்சி வழிகாட்டு மையத்தின் வழிகாட்டுதலோடு உருவாக்கப்பட உள்ளதாகவும், படிப்படியாக அனை த்துக் கல்லூரிகளிலும் இது விரிவு படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் அமைச்சர் கோவி. செழியன், மண்டோ ஆட்டோமோ ட்டிவ் (Mando Automotive), அப்ஸ் (UPS) மற்றும் அக்னிகுல் (AgniKul) ஆகிய நிறுவனங்களுக்கு நிறுவன மேலாண்மைக்குழுவில் உறுப்பின ராவதற்கான அழைப்பிதழை வழங்கி னார். மேலும் இந்நிறுவனங்களில் உள்களப் பயிற்சி வாய்ப்பிற்கான அழைப்புக் கடிதங்களையும் மாணவியருக்கு அமைச்சர் வழங்கி னார்.