tamilnadu

img

விருத்தாசலம் - மதனத்தூர் நெடுஞ்சாலைப் பணிகள் ஆய்வு

விருத்தாசலம் - மதனத்தூர்  நெடுஞ்சாலைப் பணிகள் ஆய்வு

அரியலூர், செப். 1-  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்ட்தை அடுத்த மதனத்தூர்-கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வரை நடைபெற்று வரும் சாலை அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலை ஆராய்ச்சி மைய இயக்குநர் சரவணன், சனிக்கிழமை ஆய்வு செய்தார். ஜெயங்கொண்டம் உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் சார்பில் நடைபெறும் இச்சாலை அகலப்படுத்தும் பணியை பார்வையிட்ட அவர், சாலையின் தரம், உறுதி தன்மை, தார்ச் சாலையின் தடிமன் மற்றும் சாலையின் மையச் சரிவு ஆகியவற்றை ஆய்வு செய்ததுடன் சாலையோரம் மரக்கன்றுகளை நட்டார். இந்த ஆய்வின்போது, விழுப்புரம் மற்றும் அரியலூர் நெடுஞ்சாலைத்துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர்கள், உதவி கோட்டப் பொறியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.