மருத்துவமனையை தரம் உயர்த்த வலியுறுத்தல்
மருத்துவமனையை தரம் உயர்த்த வலியுறுத்தல் கோவை, அக்.16- பட்டணம் ஊராட்சிக்குட் பட்ட பட்டணம் புதூர் பகுதி யில் உள்ள தாய்சேய் நல விடுதி மற்றும் ஆரம்ப சுகா தார நிலையத்தை மருத்துவ மனையாகத் தரம் உயர்த்தி விரிவுபடுத்த கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட சுகாதாரத்துறை அலு வலரிடம் செவ்வாயன்று மனு அளித்தனர். கோவை மாவட்டம், பட்டணம் புதூர் தொடங்கி, நாயக்கன் பாளையம் மற்றும் அனைத்து புதிய குடியிருப்புப் பகுதி களிலும் உள்ள மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளான சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி, அஞ்சல் துறை வசதி, தாய்சேய் நல விடுதியை மருத்துவமனையாகத் தரம் உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற ஊராட்சி மன்ற நிர்வாகத்தை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பட்டணம் கிளை சார்பாக கடந்த மாதத்தில் இருந்து பொதுமக்களிடம் கையொப்பம் பெறப்பட்டது. தொடர்ந்து, இந்த கோரிக்கை மனு தயார் செய்யப்பட்டு அந்தந்தத் துறைகளின் உயர் அதிகாரிகளிடம் வழங்கப் பட்டது. அதன் ஒரு பகுதியாக, பட்டணத்தில் உள்ள தாய்சேய் நல விடுதி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவ மனையாக தரம் உயர்த்தி விரிவுபடுத்தக் கோரி, மாவட்ட சுகாதாரத்துறை அலுவலரிடம் மனு அளித்தனர். மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ரவீந்திரன் தலை மையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பட்டணம் கிளைச் செயலாளர் கிருஷ்ணன் குட்டி, விஜயன் ஆகியோர் பங் கேற்றனர்.
