tamilnadu

img

கருணை அடிப்படையில் பணி வழங்க வலியுறுத்தல்

கருணை அடிப்படையில் பணி வழங்க வலியுறுத்தல்

நாமக்கல், செப்.14- சாலைப் பணியாளர் உயிரிழந் தால், கருணை அடிப்படையில் அவ ரது குடும்பத்திற்கு பணி வழங்க  வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கம்  வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத் தின் நாமக்கல் கோட்ட 9 ஆவது மாநாடு, திருச்செங்கோட்டில் நடை பெற்றது. இம்மாநாட்டிற்கு சங்கத் தின் மாவட்டத் தலைவர் ஜாகிர் உசேன் தலைமை வகித்தார். மாநில  செயற்குழு உறுப்பினர் பழனிச் சாமி வரவேற்றார். மாநிலத் தலை வர் பாலசுப்பிரமணியம் துவக்க வுரையாற்றினார். மாநிலச் செயலா ளர் செந்தில்நாதன் வாழ்த்திப் பேசி னார். இம்மாநாட்டில், சாலைப் பணி யாளர்களின் 41 மாத பணி நீக்க  காலத்தை, சென்னை உயர்நீதி மன்ற ஆணையின்படி பணிக்கால மாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலைப் பணி யாளர்கள் உயிரிழந்தால், அவரது குடும்பத்திற்கு கருணை அடிப் படையில் பணி வழங்க வேண் டும். விண்ணப்பம் செய்து காத் திருப்பவருக்கு விரைந்து பணி வழங்க வேண்டும். மாநில நெடுஞ் சாலை ஆணையத்தை கலைத்திட  வேண்டும். அரசே நெடுஞ்சாலை களை பராமரித்து கிராமப்புற இளை ஞர்களை சாலைப் பணியாளர்க ளாக நியமனம் செய்ய வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் கோட்டத் தலைவராக த.ஜாகிர் உசேன், செயலாளராக ப.ரவி, பொருளாளராக ஆ.மயில்சாமி மற் றும் துணைத்தலைவர்கள், துணைச்செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ் நிறைவுரை யாற்றினார். இதைத்தொடர்ந்து, திருச்செங்கோட்டின் முக்கிய வீதி கள் வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட  நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்களின் பேரணி நடை பெற்று, தேரடி வீதியில் பொதுக்கூட் டம் நடைபெற்றது. இதில் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.