tamilnadu

img

திருத்துறைப்பூண்டியில் முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்ட பேரவை

திருத்துறைப்பூண்டியில் முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்ட பேரவை

திருத்துறைப்பூண்டி, ஆக. 31-  திருவாரூர் மாவட்டத்தில் முறைசாரா தொழிலாளர் சங்க பேரவை  திருத்துறைப்பூண்டி சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. பேரவைக்கு பக்கிரிசாமி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் யு. ராமசந்திரன் வேலை அறிக்கை வாசித்தார். மாவட்டப் பொருளாளர் தமயந்தி வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்தார். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் எம். முரளி துவக்கவுரை ஆற்றினார். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் பி.என். லெனின், மீன் சங்க மாவட்டச் செயலாளர் எம்.பி.கே பாண்டியன், விதொச ஒன்றியச் செயலாளர் மதியழகன், கட்டுமான சங்க நகரச் செயலாளர் பாலமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பேரவையில், புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், மாவட்டத் தலைவராக சீனி.மணி, செயலாளராக யு. ராமசந்திரன், பொருளாளராக தமயந்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை அறிமுகம் செய்து, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜீ.ரகுபதி நிறைவுரை ஆற்றினார்.