tamilnadu

img

மின் கட்டண உயர்விற்கு எதிர்ப்பு: தொழில் அமைப்புகள் உண்ணாவிரதம்

கோவை, நவ. 25 -  மின் கட்டண உயர்வை கண்டித்து 18 தொழில் அமைப்புகளின் கூட்ட மைப்பு (போசியா) கோவையில் வேலை நிறுத்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சிறுகுறு தொழில் நிறுவனங்க ளுக்கு பீக்அவர் கட்டணத்தை நீக்க வேண்டும். நிலைக்கட்டணம் தொடர் பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நவ. 25ஆம் தேதி ஒரு நாள் அடை யாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு “போசியா” அறைகூவல் விடுத்தி ருந்தது. இதன்ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள சிறுகுறு தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றன. மேலும், தமிழக அரசின் கவ னத்தை ஈர்க்கும்  விதமாக தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியா சார்பில் 18 கூட்டமைப்பு களுடன் இணைந்து கோவை சிவனந்தா காலனி பவர் ஹவுஸ் அருகே தொழில் முனைவோர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து சிறுகுறு தொழில் முனைவோர்கள் கூறுகையில், ஒன்றிய பாஜக அரசு ஏற்கனவே பண மதிப் பிழப்பு நடவடிக்கையால், ஒருபகுதி தொழிலை நாசம் செய்தது, பின்னர், ஜிஎஸ்டி வரிவிதிப்பால் அனைத்து தொழில்களையும் நெருக்கடிக்கு தள்ளியது, இதனைத்தொடர்ந்து கொரோனா பெருந்தொற்றால் உயிர் பிழைத்தால் போதும், தொழிலை பிறகு பார்த்துக் கொள்ளாலம் என்கிற நிலையில் அடுத்த இடியாய் மூலப் பொருட்களின் விலை உயர்வு என அடுத்தடுத்த ஒன்றிய பாஜக அரசின் தாக்குதல்களால் நிலை குலைந்து போய் உள்ளோம். இந் நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது, எங்களின் நெருக்க டியை புரிந்து கொண்டு தமிழக அரசு கைதூக்கி விடும் என்கிற நிலையில், இந்த மின் கட்டண உயர்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேறு வழியின்றியே இந்த போராட்டத்தில் இறங்க வேண்டிய நிலை ஏற்பட் டுள்ளது. இப்போதும் தமிழக முதல் வரின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அவரின் கவனத்தை ஈர்க்கவே இந்த வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட் டத்தில் ஈடுபட்டிருக்கிறோம்.  இந்த வேலை நிறுத்த போராட் டத்தையொட்டி கோவை மாவட் டத்தில் சிறுகுறு தொழில்கள் நிறைந்துள்ள, பீளமேடு, கணபதி, பாப்ப நாயக்கன்பாளையம், சவுரிபாளையம், சிட்கோ, தடாகம் சாலை, இடையர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமான தொழில் கூடங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், இதனால் 30 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்தனர்.

;