tamilnadu

img

ரூ.3.33 கோடியில் உள் விளையாட்டு அரங்கப் பணிகள்: காணொலியில் துணை முதல்வர் அடிக்கல் நாட்டினார்

ரூ.3.33 கோடியில் உள் விளையாட்டு அரங்கப் பணிகள்: காணொலியில் துணை முதல்வர் அடிக்கல் நாட்டினார்

புதுக்கோட்டை, அக். 18-  3.33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுக்கோட்டை மாவட்ட உள் விளையாட்டரங்கத்தில் கூடுதல் பணிகளாக இறகுப்பந்து செயற்கை ஆடுகளம், குடிநீர் வசதி, ஒளிரும் மின்விளக்குகள் வசதி, உள்ளிட்ட பணிகளுக்காக காணொலி வாயிலாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினார். சட்டப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா, விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, நகராட்சி நிர்வாகத்துறை முதன்மைச் செயலாளர் தா.கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.