கொல்கத்தா, ஜூன் 10- இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா -வங்கதேசம் இடையே மீண்டும் பேருந்து போக்கு வரத்து சேவை செயல்பட துவங்கியது. கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் தீவிரமானதால், இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ரயில், பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. தற்போது, கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் கடந்த மே 29ஆம் தேதி முதல் சில இடங்களில் தொடங்கி உள்ளன. இதனால் 2 நாட்டுப் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் வங்கதேசத்துக்கான பயணிகள் ரயில் சேவை வெள்ளியன்று முதல் மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து வெள்ளியன்று காலை கொல்கத்தாவிற்கு முதல் பேருந்து சேவை கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.