இந்திய மாணவர் சங்கத்தின் 52 ஆவது அமைப்பு தினம் தமிழகத்தின் பல்வேறு கல்வி நிலைய வளாகங்களில் கொண்டாடப்பட்டது. கோவை மாவட்டம் அன்னூரில் சங்கத்தின் கொடியை மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் ஏற்றி வைத்தார். திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரியில் மாநில துணைச் செயலாளர் ஆறு.பிரகாஷ் கொடியேற்றி வைத்தார். வடசென்னை மாவட்டம் திருவொற்றியூரில் 28 வீடுகள் இடிந்த இடத்திற்கு சென்று அங்கு கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சங்கத்தின் தலைவர்கள் அகல்யா, காவியா உள்ளிட்டோர் நோட்டு, புத்தகங்கள் வழங்கினர்.